வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற தேவையில்லை.. தெரிஞ்சுக்க வேண்டிய 5 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆதார் எங்கெல்லாம் தேவைப்படும் ? முழு தகவல் !- வீடியோ

    டெல்லி: வங்கி கணக்கு துவங்க இனி ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்ய தேவையில்லை. இது தொடர்பான விஷயங்களை இப்போது பார்ப்போம்.

    இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் குடியிருப்பு முகவரியை ஆவணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் புதுப்பிக்க அல்லது மாற்ற அனுமதிக்கிறது.

    அவ்வாறு செய்வது கட்டாயமில்லை என்றாலும், புதிய வங்கிக் கணக்கைத் திறக்க நிறைய பேர் ஆதார் அட்டையை KYC ஆவணங்களில் ஒன்றாகப் பயன்படுத்துகின்றனர்.

    ஆதார் போதும்

    ஆதார் போதும்

    வங்கி கணக்கை துவங்க ஆதார் பயன்படுத்துவது எளிதானது, ஏனெனில் இது முகவரி சான்று மற்றும் புகைப்பட அடையாள ஆதாரமாக பயன்படுத்த முடியும். முன்பு போல் இல்லாமல் இப்போது உங்கள் பான் (நிரந்தர கணக்கு எண்) க்கு பதிலாக ஆதாரையும் வங்கி கணக்கு துவங்க அரசு அனுமதிக்கிறது.

    சிக்கல் வரும்

    சிக்கல் வரும்

    இருப்பினும், உங்கள் ஆதாரில் முகவரியை மாற்றாவிட்டால், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு உங்கள் புதிய முகவரிக்கு வழங்கப்படும்போது சிக்கல் வரும்.

    புதிய வங்கி கணக்கு

    புதிய வங்கி கணக்கு

    இதுவரை, வங்கிகள் உங்கள் ஆதார் அட்டை முகவரியை உங்கள் நிரந்தர மற்றும் தற்போதைய முகவரியாக கருதி வந்ததால் இந்த சிக்கல் ஏற்படும். குறிப்பாக ஊர் விட்டு ஊர் மாறியவர்களின் ஆதார் அட்டை முகவரியை மாற்றாவிட்டால் புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பது கடினமாகிவிடும்.

    தேவையில்லை

    தேவையில்லை

    இந்த சூழ்நிலையில் வங்கி கணக்கு துவங்க இனி ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்ய தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. அது தொடர்பான ஐந்து முக்கி விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

    இனி துவங்கலாம்

    இனி துவங்கலாம்

    1) ஆதார் அட்டையில் உள்ள முகவரியும் பொருந்தாத நிலையில் இருந்தாலும் நடப்பு முகவரியுடன் கணக்குகளைத் திறக்க மத்திய நிதி அமைச்சகம் இப்போது வங்கிகளை அனுமதித்துள்ளது.

    வங்கி கணக்கு

    வங்கி கணக்கு

    2) நீங்கள் குறிப்பிட்ட முகவரி உங்கள் தற்போதைய முகவரியிலிருந்து வேறுபட்ட ஊரில் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கைத் திறக்கிறீர்கள் என்றால், உங்கள் உள்ளூர் முகவரியைக் குறிப்பிடக்கூடிய சுய அறிவிப்பு படிவத்தைக் கேளுங்கள்.

    அப்படி அர்த்தமல்ல

    அப்படி அர்த்தமல்ல

    3) புதிய விதி உங்கள் ஆதார் அட்டை முகவரியை மாற்றக்கூடாது என்று அர்த்தமல்ல. தற்போதைய முகவரி விதி வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு மட்டுமே பொருந்தும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.

    வங்கி கிளையை மாற்ற

    வங்கி கிளையை மாற்ற

    4) நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அடிப்படை வங்கி கிளையை மாற்றுவதற்கும் புதிய ஆதார் அட்டை விதியையும் பயன்படுத்தலாம்.

    ஆதார் சட்டம் அல்ல

    ஆதார் சட்டம் அல்ல

    5) பணமோசடி தடுப்பு (பதிவுகளை பராமரித்தல்) விதிகளை திருத்துவதன் மூலம் இந்த மாற்றங்கள் அரசால் செய்யப்பட்டுள்ளன, ஆனால் ஆதார் சட்டம் அல்லது ஆதார் தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இதற்காக திருத்தப்படவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+