டெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்
Recommended Video
டெல்லி: டெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி டெல்லி சட்டசபையின் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்வு செய்தனர்.
இதையடுத்து அவர் டெல்லியின் முதல்வராக 3 ஆவது முறை இன்று ராம் லீலா மைதானத்தில் பதவியேற்றார்.

கவலைப்பட வேண்டாம்
இந்த விழா டெல்லி மக்கள் முன்னர் நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. விழாவில் 6 அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அப்போது அவர் பேசுகையில் டெல்லியின் மகனாக பதவியேற்றுள்ளேன். டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை.

உதவி
டெல்லி தேர்தல் வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. இது ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு டெல்லிவாசிகளின் வெற்றியாகும். கடந்த 5 ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டு வருவதே எங்கள் பிரதான முயற்சியாக இருந்தது. டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்
டெல்லி வளர்ச்சிக்காக பிரதமரின் உதவியை எதிர்பார்க்கிறேன்.

உழைப்பேன்
மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படாமல் 5 ஆண்டுகளும் அவருக்காகவும் பாடுபட்டோம். டெல்லி தேர்தல் முடிந்துவிட்டது. நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஆனால் தற்போது அனைத்து டெல்லிவாசிகளும் என் குடும்பத்தினர். நான் கட்சி, மதம், ஜாதி பேதமின்றி 5 ஆண்டுகளும் அனைவருக்காகவும் உழைப்பேன்.

அன்பு
கெஜ்ரிவால் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறேன் என சிலர் கூறுகின்றனர். விலைமதிப்பில்லாத ஒவ்வொரு விஷயமும் இந்த உலகில் இலவசமாக கிடைக்கும் என்பது இயற்கையான ஒன்று. அது தாயின் அன்பாக இருந்தாலும் சரி, தந்தையின் ஆசிர்வாதமாக இருந்தாலும் சரி. எனவே கெஜ்ரிவால் அவர்களது மக்கள் மீது அன்பாக இருக்கிறார். எனவே இந்த அன்பு என்பது அனைத்தையும் இலவசமாக கொடுக்கும்.

ஆசிர்வாதம்
பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். அவர் வேறொரு நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. இந்த மேடை வழியாக டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிறேன் என்றார் கெஜ்ரிவால்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications