ஐயய்யோ அநியாயம்.. நேரா, மோடி வீட்டுக்கே போகும் ஆம் ஆத்மி தொண்டர்கள்.. முற்றுகை
டெல்லி: டெல்லி முதலமைச்சரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வரும் 26ம் தேதி பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல நேற்று முன்தினம் டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே டெல்லியின் மூன்று அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இத்துடன் நிற்காமல், டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். வீடு மட்டுமல்லாது அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 26ம் தேதி பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில கன்வீனர் கோபால் ராய் கூறுகையில், "இன்று டெல்லி ஷஹீதி பூங்காவில் இருந்து 'மக்கள் இயக்கம்' தொடங்கும். பஞ்சாபில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் எம்எல்ஏக்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒன்று கூடி பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தை நடத்துவார்கள்.
மார்ச் 25ம் தேதி ஹோலி கொண்டாடுவார்கள். ஆனால், அதற்கு அடுத்தநாள் பிரதமர் வீட்டை நாங்கள் முற்றுகையிடுவோம். மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக வீடியோவை வெளியிட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி, "சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என கெஜ்ரிவால் கூறியதாக தெரிவித்திருந்தார். அதாவது, "சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். எந்த சிறையும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறேன், இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை" என கெஜ்ரிவால் கூறியதாக வீடியோவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது ஏன்?: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்சியாக சம்மன் அனுப்பப்பட்டு அதன் பின்னர்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications