டெல்லி சட்டசபை தேர்தல்.. சிங்கப் பெண்களாக மாறிய 8 பெண்கள்.. ஆஹா அபாரம்!
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட 9 பெண் வேட்பாளர்களில் 8 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தலைநகர் டெல்லி போராட்டக் களமாகவும் துப்பாக்கிகள் அதிகம் புழங்கும் இடமாகவும் மாறிய நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளுக்கு கடந்த 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் எக்சிட் போல் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே 3-ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டது.

கூடுதல் வெற்றி
இந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு வெளியாக தொடங்கியது. இதில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை காட்டிலும் 22 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ்
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 24 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. இதில் ஆம் ஆத்மி மட்டும் 9 பெண்களை களமிறக்கியது. அவர்கள் அதிஷி, ராக்கி பிர்லா, பாவ்னா கவுர், பார்மிளா தோக்காஸ், தன்வந்தி சந்டேலா, பந்தன குமாரி, ப்ரீத்தி தோமர், ராஜ் குமாரி தில்லியன் உள்பட 9 பேரை களமிறக்கியது.

தோல்வி
கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி 11,393 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸின் ஷிவானி சோப்ராவையும், பாஜகவின் தாரம்பீர் சிங்கையும் தோற்கடித்தார். அது போல் ஆர் கே புரம் சட்டசபை தொகுதியில் பிரமீளா தோக்காஸ் பதவியை தக்க வைத்து கொண்டார். அவர் பாஜகவின் அனில் குமார் சர்மாவை 10 ஆயிரம வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தொகுதி
மங்கல்பூரி சட்டசபை தொகுதியில் ராக்கி பிர்லா 30,116 வாக்கு வித்தியாசத்திலும் பாலம் சட்டசபை தொகுதியில் பாவ்னா கவுர் 32, 765 வாக்குகள் வித்தியாசத்திலும் முறையே பாஜகவின் கரம் சிங் கர்மா, பாஜகவின் விஜய் பண்டிட் ஆகியோரை தோற்கடித்தனர். அது போல் ரஜௌரி கார்டன் தொகுதியில் தன்வந்தி சந்டேலா 22,972 வாக்குகள் அதிகம் பெற்று பாஜகவின் ரமேஷ் கன்னாவை தோற்கடித்தார்.

இத்தனை வாக்குகள்
ஷாலிமர் பாக் தொகுதியில் ஆம் ஆத்மியின் பந்தனா குமாரி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரேகா குப்தாவை தோற்கடித்தார். திரிநகரில் ப்ரீத்தி தோமர் பாஜகவின் திலக் ராம் குப்தாவை விட 10,710 வாக்குகள் அதிகம் பெற்றார். ஹரிநகரில் ராஜ் குமாரி தில்லியன் பாஜக வேட்பாளர் தஜீந்தர் பால் சிங்கை விட20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications