டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஆம் ஆத்மி அலை.. 63 தொகுதிகள் வெல்ல கூடும்.. ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ

    டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெறும் என்று ஏபிபி டிவி சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ ஆம் ஆத்மி அலை வீசுவது போல அந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

    70 தொகுதிகள் கொண்ட, டெல்லி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணியுடன் சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும், பல்வேறு டிவி சேனல்களும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டன.

    AAP will win 49 to 63 seats in Delhi: ABP News C-Voter exit poll

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 45 சீட் கிடைக்கும் என்று சுதர்ஷன் நியூஸ் எக்ஸிட் போல் தெரிவிக்கிறது. அதேநேரம், பாஜகவுக்கு 24 முதல் 28 சீட் கிடைக்கலாம், காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 3 சீட் கிடைக்க வாய்ப்பு என்று சுதர்ஷன் நியூஸ் எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

    ஆம் ஆத்மிக்கு 49 முதல் 63 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு என்று கணித்துள்ளது, ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவு. அப்படிப் பார்த்தால் டெல்லியில் ஆம் ஆத்மி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ள முடியும். பாஜகவுக்கு 5 முதல் 19 இடங்களும், காங்கிரசுக்கு 0 முதல் 4 தொகுதிகளும் கிடைக்கலாம் என கணித்துள்ளது ஏபிபி சி வோட்டர்.

    அடேங்கப்பா.. ஆம் ஆத்மிக்கு 48 முதல் 61 இடங்கள்... பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியே சொல்லுதே! அடேங்கப்பா.. ஆம் ஆத்மிக்கு 48 முதல் 61 இடங்கள்... பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியே சொல்லுதே!

    இவ்வாறு அதில் கணிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 5 வருடங்களாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகம் என தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பலவும் கூறின. ஆனால் எப்போதுமே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்தான், ரிசல்ட்டுக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும். எனவே எக்சிட் போல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புக்கும் இருந்தது. எக்ஸிட் போல் முடிவுகளும் அதேபோல வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    According to the ABP News C-Voter exit poll, AAP will win 49 to 63 seats in Delhi. BJP to win 5 to 19 seats and Congress to win 0 to 4 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X