ஆரோக்யா சேது ஆப்: கொரோனாவிடம் இருந்து உங்களை பாதுகாக்க மத்திய அரசு வெளியிட்ட செம ஆப்!
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் இதற்கு ஆரோக்யா சேது (Aarogya Setu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் இதற்கு ஆரோக்யா சேது (Aarogya Setu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் மொத்தம் 2640 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 209 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக 74 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

இந்த கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், தனியார் துறைகள் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் இதற்கு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்யா சேது (Aarogya Setu) எனப்படும் ஆப் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகே இருக்கும் நபர்கள் மூலம் உங்களுக்கு எந்த அளவிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று இந்த ஆப் கணித்து உங்களை எச்சரிக்கும்.
இது ஏஐ மூலம் செயல்பட கூடிய ஆப் ஆகும். உங்கள் ஜிபிஎஸ் லொகேஷன், ப்ளூடூத், வைஃபை ஆகியவற்றின் மூலம் இது உங்கள் இருப்பிடத்தை வைத்து உங்களை எச்சரிக்கும். உங்களுக்கு கொரோனா ஏற்பட்டால், இதில் நீங்கள் தகவலை தெரிவிக்கலாம். அதன்மூலம் உங்களுக்கு அருகே உள்ளவர்களை இந்த ஆப் எச் மொத்தமாக டேட்டாக்களை திரட்டி இந்த ஆப் உங்களை சோதனை செய்யும். அதேபோல் அரசுக்கும் உடனுக்குடன் இது கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கும். இந்த ஆரோக்யா சேது ஆப் இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்கு தளத்தில் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக டேட்டாக்களை திரட்டி இந்த ஆப் உங்களை சோதனை செய்யும். அதேபோல் அரசுக்கும் உடனுக்குடன் இது கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கும். இந்த Aarogya Setu ஆப் இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்கு தளத்தில் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Link to download Aarogya Setu App: https://play.google.com/store/apps/details?id=nic.goi.aarogyasetu&hl=en_IN












Click it and Unblock the Notifications