பயந்துபோன அபிஜித் தீப்கே? கரப்பான்பூச்சிகளே அமைதியாக இருங்கள்.. திடீர் வீடியோவின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''கரப்பான்பூச்சிகளே, உங்களை நேசிப்பவர்களுடனும், நீங்கள் நேசிக்கும் நபர்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் இருங்கள். அமைதியாக இருங்கள். வெறுப்பு உங்களை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள்'' என்று திடீரென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள வீடியோ அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

abhijeet-dipke-urges-calm-amid-detention-of-sourav-das-ashutosh-ranka

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அபிஜித் தீப்கே மட்டும் ஜாமீனில் வெளியே உள்ளார். சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக சிறைவாசம் அனுபவிக்கும் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவின் நீதிமன்ற காவல் நாளை வரை உள்ளது. நாளை மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்களா? இல்லை மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு தான் தெரியவரும். இதற்கிடையே தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அபிஜித் தீப்கே கூறியதாவது:

ஹாய் கரப்பான்பூச்சிகளே.. சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவிற்கு நேர்ந்த விஜயத்தால் அனைவரும் கவலையடைந்து இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். நாம் வெறுக்கும் நபர்களை போல் நாமும் மாறிவிடக் கூடாது. அவர்களுக்கு (சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா) இழைக்கப்படும் அநீதி முற்றிலும் தவறானது. நியாயமற்றது. நாம் அன்பு, அமைதி, கருணை நிறைந்த பாதையில் செல்கிறோம். இதில் இருந்து திசைதிருப்பவே அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

நம்மைத் தூண்டிவிட்டு அவர்களை போல் நம்மையும் வெறுப்புடன் செயல்பட வைக்க நினைக்கிறார்கள். அதற்கு இடம் அளிக்க கூடாது. இதனால் முக்கிய விஷயத்தை சொல்கிறேன். அது என்னவென்றால் உங்களை நேசிப்பவர்களுடனும், நீங்கள் நேசிக்கும் நபர்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் இருங்கள். அமைதியாக இருங்கள். வெறுப்பு உங்களை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள்.

சவ்ரவ், அசுடோஷ் ரங்கா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் நாம் பயந்துவிடப் போவதில்லை. நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம். நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்கள் சரியானதொரு விஷயத்திற்காகப் போராடுகிறோம். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை'' என கூறியுள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியில் அபிஜித் தீப்கேவிற்கு பிறகு முகமாக இருந்தவர்கள் தான் சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா. ஆனால் இவர்கள் 2 பேரும் கடந்த 13ம் தேதி தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்டு அக்டோபர் 14ல் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 5 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் மீண்டும் 3 நாட்கள் (நாளை வரை) சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு எக்ஸிக்கியூட்டிவ் மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார். இதனை கரப்பான்பூச்சி கட்சியினர் எதிர்பார்க்காத நிலையில் அவர்கள் 2 பேரையும் விடுவிக்கும்வரை அமைதி காக்கும்படியும், அதன்பிறகு அடுத்தக்கட்ட திட்டத்தை கையில் எடுக்க அபிஜித் தீப்கே திட்டமிட்டு வருகிறார். என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதற்கு முன்பாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் சோர்ந்து விடக்கூடாது. நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்பதற்காக அபிஜித் தீப்கே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாருக்கு அபிஜித் தீப்கே பயப்படவில்லை என்பதும், அடுத்து விரைவில் போராட்டத்தில் குதிப்பார் என்பதற்கான மெசஜோக இந்த வீடியோ உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+