ஸ்டாலின் தான் பெஸ்ட்! சிறந்த முதல்வர்கள் லிஸ்டில் பினராயி, கெஜ்ரிவால்! கரப்பான் பூச்சி கட்சி பாராட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாஜி முதல்வர்களான ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தான் நாட்டிலேயே சிறந்த முதல்வர்கள் என்று கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை இந்த முதல்வர்கள் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நடந்த போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது. இந்த போராட்டம் மத்திய அரசையே பின்வாங்க வைத்த நிலையில், கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானும் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. அந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான் பூச்சி கட்சி தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளில் இறங்கியுள்ளன.

Cockroach Janata Party MK Stalin

ஸ்டாலின் பெஸ்ட்

இதற்கிடையே பிரபல ஊடகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே மற்றும் கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார் என்பது தொடர்பாக நெறியாளர் கேள்வி எழுப்பினார். சில நொடிகள் யோசித்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, மாஜி முதல்வர்களான ஸ்டாலின், பினராயி விஜயன், கெஜ்ரிவால் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி

மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனை குறிப்பிட்ட திப்கே, மாநிலத்தின் பொருளாதாரத்தை ஸ்டாலின் மிக சிறப்பாக மேம்படுத்தியதாக குறிப்பிட்டார். மேலும், கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் வலுவான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் பாராட்டினார். டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு பள்ளிகள் மற்றும் சுகாதார கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததாக பாராட்டினார். இப்படி மூன்று முதல்வர்களின் நிர்வாக அணுகுமுறைகளை குறிப்பிட்டு, அவர்கள் சிறந்த முதல்வர்களாக இருந்ததாக அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்..

பாஜக விமர்சனம்

திப்கேவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இருப்பினும், தீப்கேவின் இந்த கருத்துகளை பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனரப். குறிப்பாக சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய ஷெஹ்சாத் பூனாவாலா, வீடியோ வெளியிட்டு கரப்பான் பூச்சி கட்சியை சாடியுள்ளார். இந்த மூன்று தலைவர்களும் தங்கள் மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறிய அவர், இதுபோன்ற தலைவர்களை கரப்பான் பூச்சி கட்சி தலைமை சிறந்த முதல்வர்களாக தேர்வு செய்திருப்பதை விமர்சித்தார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இருக்கும் ஜனதா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, கரப்பான் பூச்சி கட்சி என்று மட்டும் வைத்து கொள்ளலாம் என அவர் கூறினார். மேலும், ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழக அரசின் கடன் உயர்ந்ததாக அவர் தெரிவித்தார். பினராயி விஜயன் ஆட்சியில் கேரளாவில் கொரோனா உயிரிழப்புகள் உச்சம் தொட்டதாகவும் மற்றும் கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லியில் மதுபான கடைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் அவர் சாடினார்.

3 மாநிலங்களிலும் தோல்வி

தமிழகத்தில் மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வி அடைந்தது. இப்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.. குறிப்பாக மு.க. ஸ்டாலினே தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்திருந்தார். கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரிகள் அரசு வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி மே மாத தேர்தலில் தோல்வி அடைந்திருந்தது.

டெல்லியில் 2025ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தது. அங்கு ரேகா குப்தா முதல்வராக பொறுப்பேற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+