பாலியல் புகாரில் கங்குலி சிஷ்யன் கைது.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய டெல்லி அணி.. என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான அபிஷேக் போரல் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அபிஷேக் போரலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் எவ்வளவு தூரம் சர்ச்சை சம்பவங்கள் நடக்கிறதோ.. அதேபோல அந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகவே இருக்கிறது. அப்படி தான் இப்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் போரல் சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

Abishek Porel Arrested Delhi Capitals

பாலியல் புகார்

மருத்துவ மாணவி ஒருவர் அவர் மீது அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிஷேக் போரலை எமாமி சிட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் மருத்துவ மாணவி ஒருவர் அபிஷேக் போரலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக அபிஷேக் போரல் உறுதியளித்ததாகவும், அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கைது

கடந்த ஆண்டு முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அபிஷேக் போரல் தன்னிடம் இருந்து விலக தொடங்கியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது திருமணம் செய்து கொள்ள அவர் மறுப்பதாகவும், தன்னை தாக்கி மிரட்டியதாகவும் அந்த மருத்துவ மாணவி குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் பின்னர் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அபிஷேக் போரல் ஏற்கனவே மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலி தான் குரு

இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் போரல், 2021-22 சீசனில் பெங்கால் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 32 முதல் தர போட்டிகள் மற்றும் 23 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் 2023ஆம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிஷேக் போரலுக்கு கங்குலி தான் கிட்டத்தட்ட காட்பாதர் போல.. கங்குலி டெல்லி அணியின் மெண்டராக இருந்தபோது தான் அபிஷேக் போரலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கினார். இதனால் தான் அவரால் தனது திறமையை உலகிற்கு காட்ட முடிந்தது.

டெல்லி அணி

கடந்தாண்டே இந்த மாணவி பாலியல் விவகாரம் எழுந்தது. இதனால் அவருக்கு கடந்தாண்டு போதிய வாய்ப்பு தரப்படவில்லை. கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 4 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடிய அவர் 108 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களில் இந்தியா ஏ அணியுடனும் அவர் சென்றுள்ளார்.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்களை விடுவிக்கும் காலம் இன்னும் முடியவில்லை. அதற்குள் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே, டெல்லி அணி இவரை விடுவிக்கும் முடிவை கூட எடுக்கலாம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+