பஞ்சாப் ஏபிபி- சிவோட்டர்ஸ் எக்ஸிட் போல்: ஆம் ஆத்மிக்கு கலக்கல் வெற்றி! காங்கிரசுக்கு எத்தனை இடங்கள்
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி- சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெற்ற இடங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இந்த முறை பெரும் உட்கட்சி குழப்பத்திற்கு இடையே காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆம்ஆத்மி வெற்றி
தற்போது ஏபிபி- சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி 51 முதல் 61 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்று என்ற பிரசாரத்தை முன்னெடுக்கும் ஆம் ஆத்மி, இதன் மூலம் டெல்லிக்கு வெளியே முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தோல்வி
அடுத்து தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி வெறும் 22 முதல் 28 இடங்களை மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அகாலி தளம் 20 முதல் 26 இடங்களில் வெல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஜக கூட்டணி 7 முதல் 13 இடங்களிலும் இதர கட்சிகளும் சுயேச்சைகளும் 1 முதல் 5 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாக்கு சதவிகிதம்
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி அதிகபட்சமாக 39% பெறும் என ஏபிபி சிவோட்டர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 26.7%, பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ள நிலையில், காங்கிரஸ் மட்டுமின்றி அகாலி தள வாக்கு வங்கியும் சரிகிறது. அகாலி தளம் 20.7% வாக்குகள் மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் தேர்தல்
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 59 இடங்கள் தேவை, கடந்த தேர்தலை கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. பஞ்சாப் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications