டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

73 பேர் கைது செய்யப்பட்ட விபசார விடுதி கேஸ்- மேகாலயா பாஜக தலைவர் மரக் டெல்லியில் தஞ்சம்?

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டையே அதிர வைத்த மெகா விபசார விடுதி வழக்கில் சிக்கிய மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் என் மரக், தற்போது டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகாலயா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர் பெர்னார்ட் என் மரக். மேகாலயாவில் தடை செய்யப்பட்ட ஆயுத குழுவான அச்சிக்லேண்ட் இயக்கத்தில் செயல்பட்டவர் மரக். அதாவது மேகாலயா மாநிலத்தின் கரோ பழங்குடிகளுக்கு தனி மாநிலம் அமைக்க கோரிய ஆயுத குழு இந்த அமைப்பு.

Absconding Meghalaya BJP leader Bernard Marak in Delhi?

இந்த ஆயுதக் குழுவான இரண்டாகப் பிளவுபட்ட காலத்திலும் செயல்பட்டவர் மரக். பின்னர் இரு குழுக்களும் ஆயுதங்களை கீழே போட்ட போது மரக்கும் சரணடைந்தார். அதன்பின்னர் பாஜகவில் மரக் இணைந்தார்.

மேகலாயாவில் பாஜக-என்.பி.பி. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.பி.பி.யின் முதல்வர் கான்ராட் சங்மா, அகதா சங்மா உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பியவர் மரக். அவர் மீது ஏற்கனவே ஏராளமான கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

 விபச்சார விடுதியாக மேகாலயா பாஜக தலைவர் ரிசார்ட்! ஆனால் அவர் கொடுத்த வினோத விளக்கம்! மிரண்ட போலீசார் விபச்சார விடுதியாக மேகாலயா பாஜக தலைவர் ரிசார்ட்! ஆனால் அவர் கொடுத்த வினோத விளக்கம்! மிரண்ட போலீசார்

இந்நிலையில்தான் மராக்குக்கு சொந்தமான ரிம்பு பாகன் ரிசார்ட்டில் விபசார புகாரின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்தான் 73 பேர் கைது செய்யபப்ட்டனர். 400க்கும் மேற்பட்ட மதுபாட்டிகள், 100க்கும் மேற்பட்ட காண்டம்கள் என அனைத்தும் சிக்கின. இதனால் மரக் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறபப்ட்டு வந்தது.

ஆனால் மரக், மேகாலயாவை விட்டு தப்பி ஓடி டெல்லியில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் என்.பி.பி. தலைவர்கள் மீதான புகார்களால் மரக் பழிவாங்கப்படுகிறார் எனவும் பாஜகவினர் கூறுகின்றனர். மரக், பண்ணை வீடுதான் வைத்திருந்தார். அங்கு விபசாரமே நடக்கவில்லை என்றும் விளக்கம் தந்து வருகிறது பாஜக.

English summary
Absconding Meghalaya BJP leader Bernard Marak who was booked for prostitution case, in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X