அடேங்கப்பா.. மே மாத ஜி.எஸ்.டி வருவாய் இவ்வளவா?.. மாநிலங்கள் ஜி.எஸ்.டி வருவாய் எவ்வளவு தெரியுமா?
டெல்லி: கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,02,709 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா முதல் அலை நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அதை விட கொரோனா இரண்டாவது அலை பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதித்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. கொரோனா சிகிச்சைக்கான பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,02,709 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வருவாயில் 17, 592 கோடி மத்திய ஜி.எஸ்.டி..யாகும். 22, 653 கோடி மாநில ஜி.எஸ்.டி.யாகும்.
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.53, 199 கோடியாகவும், செஸ் வரியில் கிடைத்த வருவாய் ரூ.9, 265 கோடியாகவும் இருக்கிறது. தொடர்ந்து 8-வது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் 1 லட்சம் கோடியை தாண்\டியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications