இமயமலையில் நிர்வாணமாக பொழுதை கழிக்கும் பிரபல ஹீரோ! யாருனு பாருங்க! இவருக்கு என்னாச்சு?
டெல்லி: இமயமலை பகுதியில் நிர்வாணமாக 14 நாட்களை பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கழித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வித்யுத் ஜமால். இவர் பில்லா 2, அஞ்சான், துப்பாக்கி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். வில்லன் என்றாலே கரடுமுரடாக இருந்து வந்த சூழலில் இவர் ஹேண்ட்சம் வில்லனாக இருந்தார்.

இந்த நிலையில் வித்யுத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் இமயமலை தொடர்களில் ஒரு வார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில் மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர் தான் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.
ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்துவிட்டு காட்டுப் பகுதியில் யார் உதவியும் இன்றி இயற்கையுடன் ஒன்றி இருந்து வருகிறார். வித்யுத் ஜம்மால் 7 முதல் 10 நாட்கள் வரை தனது உடலில் எந்த ஆடையும் இன்றி நிர்வாணமாகவே கழித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு இமயமலை பகுதிகளில் நிர்வாணமாக வசித்துள்ளார்.
இப்படி இருப்பதால் தன்னால் இயற்கையுடன் ஒன்றி இருக்க முடிவதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்படி இருக்கும் போது தனக்கு புதுவித சக்தி கிடைப்பதாகவும் இமயமலையில் இருந்து கிளம்பும் போது அந்த சக்தியுடன் வீட்டுக்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த அனுபவங்கள் தன்னை புதிதாக பிறக்க வைத்தது போன்று ஒரு அனுபவத்தை தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கிராக் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறாராம். அந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது போல் தனிமையில் ஆடம்பரமின்றி இருக்கும் போது தான் யார் இல்லை என்பதை அறிந்து கொள்வதன் முக்கியவத்தை உணர்வதன் மூலம் நான் யார் என்பதை தெரிந்து கொள்வது முதல் படியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை உள்ளூரில் ஆடு மேய்க்கும் மோஹர் சிங் என்பவர் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications