ஸ்கிரிப்ட் ரெடி.. பில்கிஸ் பானு துயரத்தை படமாக்கும் கங்கனா ரனாவத்? அவரே கூறிய அதிரடி பதில்! ட்விஸ்ட்
டெல்லி: குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்கான கதை தயாராக இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பு குஜராத் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதாவது, 1992ம் ஆண்டு தண்டனை குறைப்பு கொள்கையின் இதனை குற்றவாளிகள் அனைவரும் சிறையில் கழித்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தண்டனை குறைப்பு கோரினார்கள். சிறை ஆலோசனைக் குழு பரிந்துரைகள், மாவட்ட சட்ட வல்லுநர்கள் அறிவுரைகளின் அடிப்படையில்தான் அவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்திருந்தது. இருப்பினும் இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுபாஷினி அலி உட்பட மூவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர் விசாரித்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், "இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று கூறினர்.
மேலும், "பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பில்கிஸ் பானுவின் வழக்கை திரைப்படமாக எடுப்பதற்கான கதை தயாராக இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். x சோஷியல் மீடியாவில் ரசிகர் ஒருவர், "பில்கிஸ் பானுவின் வழக்கை திரைப்படமாக எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த கங்கனா, "இந்த கதையை எடுக்க மூன்று வருடங்களாக ஆய்வு செய்து ஸ்கிரிப்ட் ரெடி செய்து வைத்திருக்கிறேன். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் சில ஓடிடி தளங்கள் அரசியல் ரீதியிலான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என்று எனக்கு பதில் அளித்துள்ளனர்.
நான் பாஜகவை ஆதரிப்பதாகவும், எனவே என்னுடன் வேலை செய்ய மாட்டோம் என்று ஜியோ சினிமா சொல்லிவிட்டது. ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது?" என்று கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications