‛தவசி' பட ஹீரோயின்.. நடிகை பிரத்யுஷா தற்கொலையில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: தமிழில் விஜயகாந்தின் தவசி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை பிரத்யுஷா கடந்த 2002ம் ஆண்டில் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். 24 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் நடிகை பிரத்யுஷாவின் காதலன் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் நடிகை பிரத்யுஷா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தார். 1999ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கிய மனுநீதி படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தது தமிழில் அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு நடிகர் பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தது.
காதல் பிரச்சனை
இந்த சமயத்தில் தான் கடந்த 2002ம் ஆண்டில் அவர் தனது 22வது வயதில் திடீரென்று தற்கொலை செய்தார். இது தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது பிரத்யுஷா, சித்தார்த் ரெட்டி என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இந்த காதலை சித்தார்த் ரெட்டியின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்கொலை
இதனால் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 2002ம் ஆண்டில் பிரத்யுஷா- சித்தார்த் ரெட்டி ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர். இதில் பிரதியுஷா இறந்தார். சித்தார்த் ரெட்டி உயிர் பிழைத்தார்.
இதையடுத்து பிரத்யுஷா திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது சாவிற்கு சித்தார்த் ரெட்டி தான் காரணம் என போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரத்யுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக சித்தார்த் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காதலனுக்கு 5 ஆண்டு சிறை
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. பிரத்யுஷாவை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவருக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சித்தார்த் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தது. இது கடந்த 2011ம் ஆண்டில் நடந்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இருப்பினும் சித்தார்த் ரெட்டி தனது சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல் தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து நடிகை பிரத்யுஷாவின் தாய் சரோஜினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
‛‛சித்தார்த் ரெட்டிக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். அவர் தனது மகளை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார். கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்’ என்று நடிகை பிரதியுஷா தாயின் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் ராஜேஷ் பிண்டால் தீர்ப்பு வழங்கினர். அப்போது சித்தார்த் ரெட்டி மற்றும் நடிகை பிரதியுஷாவின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் நடிகை பிரத்யுஷா கொலை செய்யப்பட்டதாகவும், பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தாய் சுமத்திய குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இருப்பினும், சித்தார்த் ரெட்டியின் தண்டனையை 5 ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக குறைத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். அதோடு சித்தார்த் ரெட்டி தான் பிரத்யுஷாவை தற்கொலைக்கு தூண்டியது உறுதியானதால் அவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
மேலும் 4 வாரங்களுக்குள் சித்தார்த் ரெட்டி சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதன்மூலம் கடந்த 24 ஆண்டுகளாக நடந்து வந்த நடிகை பிரத்யுஷாவின் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications