டிமாண்ட்டுக்கு மத்தியிலும்.. தொழில் நிறுவனங்களுக்கான கேஸ் விலையை குறைத்த அதானி நிறுவனம்
டெல்லி: அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கேஸ் விலையை மார்ச் 16 முதல் கன மீட்டருக்கு ரூ. 119.90ல் இருந்து ரூ. 82.95 ஆகக் குறைத்துள்ளது. இது மூல உற்பத்தி செலவுகள் குறைந்துள்ளதை காட்டுவதோடு, விநியோக தடங்கல்கள் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் உள்ள நிலையிலும், அதன் விநியோக அமைப்பின் உறுதி செய்துள்ளது.

நம் நாட்டின் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் கவுதம் அதானி. இவர் அதானி குழுமத்தை நடத்தி வருகிறார். அதில் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனமும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் போரின் காரணமாக தற்போது நாட்டில் கேஸ் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ATGL) நிறுவனம், சில தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் கூடுதல் இயற்கை எரிவாயுவின் விலையை கன மீட்டருக்கு ரூ. 119.90லிருந்து ரூ. 82.95 ஆகக் குறைத்துள்ளது. இந்த புதிய விலை மார்ச் 16 அன்று காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூல உற்பத்தி எரிவாயுவின் விலை குறைந்ததே இந்த விலை குறைப்பிற்கு காரணம் என நிறுவனம் தெரிவிக்கிறது. அதேபோல் கேஸ் விநியோக சங்கிலியில் தடங்கல்கள் தொடர்ந்தாலும், குறைக்கப்பட்ட மூலவிலையின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும், எரிவாயு விநியோகத்தில் சமநிலையைப் பராமரிக்கவும் இது உதவும் என அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் உள்ளிட்டவற்றால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கேஸ் கொண்டு வரும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் எல்என்ஜி விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டன. இதன் பின்னணியிலேயே இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் வணிக மற்றும் தொழில்நிறுவன வாடிக்கையாளர்களை தங்கள் ஒப்பந்த அளவின் 40% வரை எரிவாயு நுகர்வை குறைக்கக் கேட்டிருந்தது. இந்த வரம்பை மீறிய நுகர்வுக்கு, சந்தை விலைகள் வசூலிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பிரிவுகளுக்கான விலைகள் மாற்றமின்றி தொடரும் என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 3 அன்று அறிவிக்கப்பட்ட கூடுதல் எரிவாயு விலை, தற்போது மார்ச் 16 முதல் கன மீட்டருக்கு ரூ. 119.90லிருந்து ரூ. 82.95 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. மூல உற்பத்தி எரிவாயு விலைக் குறைப்பின் பலனை வழங்குவதோடு, தற்போதைய விநியோகத் தடங்கல்களுக்கு மத்தியில் விநியோக அமைப்பின் ஒருமைப்பாட்டையும், நியாயமான எரிவாயு விநியோகத்தையும் பராமரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் எரிவாயு தொடர்பான மற்ற நிபந்தனைகள் எதிலும் மாற்றம் இல்லை என்றும் கூறியுள்ளது. GAIL (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, ஏற்கனவே உள்ள உத்தரவின் கீழ் தொழில்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 80% எரிவாயு விநியோக முறை பின்பற்றப்பட உள்ளது அதோடு இந்த மாத தொடக்கத்தில் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்குக் குழாய்வழியாக வழங்கப்படும் இயற்கை எரிவாயுவான பிஎன்ஜி விலையை உயர்த்த வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்திருந்தது. இருப்பினும், ஈரான் போர் கேஸ் சப்ளையை பாதிக்க தொடங்கியதால் சில பெரிய தொழில்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விநியோகக் கட்டுப்பாடுகளை விதித்தது.
நிறுவனத்தின் எரிவாயு அளவில் சுமார் 70% உள்நாட்டில் பெறப்படுகிறது. இது பெரும்பாலும் சிஎன்ஜி பயனர்களுக்கும், குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகள் மூலம் வீட்டு உபயோகத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த பிரிவுகளுக்கான விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனத்தின் மீதமுள்ள சுமார் 30% எரிவாயு என்எல்ஜி இறக்குமதியாக உள்ளது. இது பெரும்பாலும் வணிக மற்றும் தொழில்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஈரான் போரால் ஏற்பட்ட விநியோக தடங்கல் காரணமாக, அரசு எரிவாயு ஒதுக்கீடு முன்னுரிமைகளை மறுசீரமைத்து, சிஎன்ஜி, பிஎன்ஜி நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்தது.
சில பயனர்களுக்கான இறக்குமதி செய்யப்பட்ட எல்என்ஜி விலை ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் விளைவாக, எரிவாயு விலைகள் குறைந்துள்ளன. இந்தக் குறைக்கப்பட்ட விலைகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னர், 40% நுகர்வு வரம்பை மீறிய வணிக மற்றும் தொழில்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, அதிகரிக்கும் அளவுகளுக்கு கன மீட்டருக்கு ரூ. 119 வசூலிக்கப்பட்டது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் உள்ள நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும். அதே வேளையில், விநியோக சவால்களைக் கையாண்டு, தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications