விஜய்க்கு முன்பே டெல்லியில் ஆதவ்.. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்லும் முன்பே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றார். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் டி ராஜாவை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் என அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்து பேசினார். டெல்லியில் ஆதவ் அர்ஜுனா நடத்திய அடுத்தடுத்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய் இன்று ஒரு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற முதல்வர் விஜய், டெல்லி ஐடிசி மவுரியா ஹோட்டலில் நடைபெறும் சோனியா காந்தியின் சுய சரிதை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

Adhav Arjuna

ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்றார். அதன்பிறகு ஜூன் மாதம் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற விஜய், தற்போது மூன்றாவது முறையாக டெல்லி சென்றுள்ளார்.

அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா

டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க சென்றுள்ள நிலையில், அவருக்கு முன்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றார். டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ பேபியை சந்தித்து பேசினார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் டி ராஜாவையும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு முடிந்த கையோடு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலையும் ஆதவ் அர்ஜுனா சந்தித்தார். டெல்லியில் ஆதவ் அர்ஜுனா நடத்திய அடுத்தடுத்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், தவெக ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று கடந்த 13 ஆம் தேதியோடு 6 மாதங்கள் முடிந்துவிட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம்

இதனால், விஜய் ஆட்சி மீது மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று எதிர்க்கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. தவெக ஆட்சிக்கு எதிராக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். தவெக அரசுகு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமீப காலமாக தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்களை ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். எனவே, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், தவெகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வகுக்கும் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட்கள் என்ன முடிவு எடுக்கும்

தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்தே ஆதரவு அளித்து வருகின்றன. தவெக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அதேபோல அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் சூழல் வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+