இறங்கி அடிக்கும் இஸ்ரோ.. சந்திரனுக்கு பின் சூரியன்.. செப்.2இல் விண்ணில் பாயும் ஆதித்யா எல் 1

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சந்திரயான் 3 சாட்டிலைட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாகச் சூரியன் குறித்த ஆய்வு செய்யும் ஆதித்யா சாட்டிலைட் குறித்த முக்கிய தகவலை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

இஸ்ரோ நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பல ஆய்வுகளைச் செய்து வருகிறது. அப்படிதான் இஸ்ரோ சந்திரயான் 3 சாட்டிலைட்டை வெற்றிகரமாக அனுப்பியது.

Aditya-L1 to be launched from Sriharikota on September 2 says ISRO

சுமார் 40 நாட்கள் பயணித்த சந்திரயான் 3 கடந்த வாரம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற சாதனையைச் சந்திரயான் 3 படைத்தது.

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. குறிப்பாக யாருமே தரையிறங்காத நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 3 இப்போது தரையிறங்கியுள்ளது. அடுத்த 14 நாட்களுக்கு அது நிலவின் ஆய்வுகளை மேற்கொள்கிறது. சந்திரயான் 3 வெற்றி என்பது இஸ்ரோவுக்கு மிகப் பெரிய பூஸ்டை கொடுத்துள்ளது. இதனிடையே இஸ்ரோ இப்போது அடுத்த திட்டத்திற்கு ரெடியாகி வருகிறது.

சந்திரயான் 3க்கு பிறகு இஸ்ரோ தனது அடுத்த மிஷனில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி இப்போது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 சாட்டிலைட் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் இந்த ஆதித்யா எல்1 விண்கலம் வரும் செப். 2இல் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செப். 2 காலை 11.50க்கு ஆதித்யா விண்ணில் பாய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா-எல்1 சாட்டிலைட் என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் லட்சிய முயற்சியாகும்

சூரியன் குறித்து நமது புரிதலை மேம்படுத்த இந்த ஆதித்யா மிஷன் உதவும் என எதிராபார்க்கப்படுகிறது. சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், சூரியனின் வெளிப்புற கரோனா குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா உதவுகிறது. சூரியனின் காந்தப்புலன்கள் பூமியில் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் மின் கட்டுமானத்தைப் பாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். எனவே, இந்த சூரியனில் இருந்து கிளம்பும் காந்தப்புலன்கள் குறித்து நாம் ஆய்வு செய்வது முக்கியமான ஒன்றாகவே இருக்கும்.

இந்த ஆதித்யா எல்1 விண்கலத்தைத் தான் வரும் செப். 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செப். 2 காலை 11.50க்கு ஆதித்யா விண்ணில் பாய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+