ஆப்கானிலிருந்து பெல்ஜியம் மண்ணை மிதித்த சிறுமி செய்த காரியம்.. ஆஹா இந்த ஒற்றை புகைப்படம் போதுமே!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சிறுமி ஒருவர் பெல்ஜியம் விமான நிலையத்திலிருந்து துள்ளி குதித்து வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆப்கானில் உள்ள நிலையை அறிய இந்த ஒற்றை புகைப்படம் போதுமே.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டை விட்டு வெளியேறும் பணிகளில் மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
காபூல் விமான நிலையத்தில் தங்கள் உயிரை காத்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். விமான நிலைய ரன்வேயில் மக்கள் கூட்டமாக இருந்து விமானங்களில் ஏறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியால் அங்கு நெருக்கடியான சூழல் நிலவி வருகின்றன. ஆப்கான் மக்கள் படும் துயரங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. டவுன் பஸ்ஸில் ஏறுவது போல் முண்டியடித்து கொண்டு அவர்கள் விமானங்களில் ஏறுவதை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. அவர்களின் செயல்பாடுகளில் ஆபத்து எத்தனை என்பதை உணர வைக்கிறார்கள்.

விமானம் பறக்க
அது போல் விமானம் பறக்க தொடங்கியதும் அதிலிருந்து இருவர் கீழே விழுந்த காட்சிகளையும் நாம் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இத்தகைய நெஞ்சை உலுக்கும் இந்த காட்சியை பார்த்தால் தப்பி பிழைத்தால் போதும் என்ற நிலையில் ஆப்கன் மக்கள் இருப்பது தெரிகிறது. சொந்த நாட்டில் வீடு, வாசலை எல்லாம் விட்டு விட்டு அண்டைய நாடுகளில் அகதிகள் போன்ற ஒரு வாழ்க்கையை நடத்துவது அவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே மனக்குமுறலாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் சென்றது
ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு பொருளும் விலையேறிவிட்டது. காரணம் அந்த நாட்டுடனான வர்த்தகத்தை பிற நாட்டினர் துண்டித்துவிட்டனர். இதனால் உணவு பொருட்கள் எல்லையில் வரிசையாக நிற்பதாகவும் இதனால் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் குடிக்கும் பாலின் விலையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்த அகோர நிலைக்கு ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டது.
Recommended Video

சமூகவலைதளங்கள்
இந்த நிலையில் ஆப்கான் சிறுமியின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் நெட்டிசன்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்து ஆப்கானின் நிலையையும் எண்ணுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டினரை மீட்க மீட்பு விமானங்கள் செல்கின்றன. அதில் பெல்ஜியத்திற்கு விமானம் மூலம் வந்த ஒரு சிறுமி அந்நாட்டு விமான நிலையத்தில் தனது பெற்றோர் முன்னே செல்ல துள்ளிக் குதித்து செல்லும் காட்சிகளை பார்க்கும் போது இந்த ஒரு புகைப்படமே ஆப்கானிஸ்தானின் நிலையை சொல்லும். இந்த புகைப்படத்தை ரீயூட்டர்ஸ் புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications