"35 பீஸாக வெட்டி.." ஷ்ரத்தா கொடூரம் மறக்க முடியுமா.. அப்தாப் சொன்ன அந்த வார்த்தை! கொலையில் ட்விஸ்ட்
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஷரத்தா என்ற பெண் கொடூரமான முறையில் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இந்த வழக்கில் இப்போது முக்கிய திருப்பம் நடந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியில் மிகவும் கொடூரமான கொலை சம்பவம் நடந்தது. அங்கே 26 வயதே ஆன ஷரத்தா என்ற பெண் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
ஷ்ரத்தா வாக்கரை அவரது காதலனே கொடூரமாகக் கொலை செய்தார்.. இந்தச் சம்பவம் குறித்து அவரது லிவ் இன் பார்ட்னர் அப்தாப் அமீன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கொடூரம்: இந்த வழக்கு விசாரணையில் வெளி வந்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷ்ரத்தா என்பவருக்கு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அப்தாப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் குறித்து ஷ்ரத்தா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். வேறு வேறு மதம் என்பதால் ஷ்ரத்தாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த எதிர்ப்பையும் மீறி ஷ்ரத்தா அப்தாப் உடன் லிவ்-இன் உறவுக்குச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஷ்ரத்தா தந்தை ஓராண்டுக்கும் மேலாக பேசுவதையே நிறுத்திவிட்டாரம். இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் இருந்து டெல்லி வந்த அவர்கள், ஒன்றாக வாழ்ந்த வந்தனர். இருப்பினும், அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருமாம். அப்போதெல்லாம் ஷ்ரத்தாவை அப்தாப் தாக்குவார் என்றும் கூறப்படுகிறது.

35 பீஸாக வெட்டி: இந்தச் சூழலில் தான் ஷ்ரத்தா சில மாதங்களாக எந்தவொரு பதிவுகளையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் கொண்டு ஷ்ரத்தா தந்தை விசாரித்த போது தான் இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அப்தாப் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்தாப்பிடம் கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஷ்ரத்தா கழுத்தை நெறித்து கொலை செய்த அவர், உடலை மொத்தம் 35 பீஸாக வெட்டியுள்ளான். மேலும், இதை மெல்ல மெல்ல சில நாட்களில் அதை டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளான். அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் போலீசார் ஷ்ரத்தா உடல் பாகங்களையும் கைப்பற்றினர்.
ட்விஸ்ட்: இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அப்தாப் மீது ஐபிசி 302 (கொலை) மற்றும் 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்ததை அப்தாப் ஒப்புக் கொண்டதாக முதலில் கூறப்பட்டது. இருப்பினும், இப்போது அப்தாப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தெரிய வருகிறது. மேலும், இதில் விசாரணையையும் அவர் கோரியுள்ளார்.
அதன்படி இந்க வழக்கு வரும் ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் இந்த வழக்கில் 6,629 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைக் கடந்த ஜன. 24இல் தாக்கல் செய்தனர்.

விசாரணை: இந்த வழக்கு விசாரணை விரைந்து நடக்க வேண்டும் எனக் கடந்த மாதம் வலியுறுத்திய ஷ்ரத்தா வாக்கரின் தந்தை விகாஸ் வால்கர், அதன் பின்னரே தனது மகளுக்கு இறுதிச் சடங்கு செய்வேன் என்றும் விசாரணையைத் தாமதப்படுத்தினால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். தனது மகளின் அஸ்தியைக் கோரி தந்தை தொடர்ந்து வழக்கு விசாரணை மே 9 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி பூனாவாலாவால் ஷ்ரத்தா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்டர்நெட்டை பார்த்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய அவர், வீட்டில் உள்ள பிரிட்ஜிலேயே 3 வாரங்கள் இந்த உடல் பாகங்களை வைத்துள்ளார். இந்த கொடூரம் நடந்து சுமார் 5 மாதங்கள் கழித்து நவ. மாதமே அப்தாப் கைது செய்யப்பட்டார்.
பூனாவாலா குற்றம் செய்துள்ளதை நிரூபிக்க டெல்லி போலீசார் நர்கோ-அனாலிசிஸ் சோதனை, பாலிகிராஃப் சோதனை மற்றும் டிஎன்ஏ ஆதாரங்களை நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் 150 போரிடம் டெல்லி போலீசார் விசாரணையையும் நடத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
