மோடி 3.0 அமைச்சரவை.. எந்த அமைச்சருக்கு எந்த துறை ஒதுக்கீடு! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இப்போது எந்த அமைச்சருக்கு எந்த துறைகள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக 240 சீட்களில் வென்ற நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இதையடுத்து நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது முறையாகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
மோடியின் 3.0 அமைச்சரவையில் அவருடன் சேர்த்து மொத்தம் 72 அமைச்சர்கள் இருந்தனர். ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த மெகா நிகழ்வில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு தலைவர்கள் மற்றும் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நேற்றைய தினம் யாருக்கு எந்த இலாகா என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், அவை நேற்று வரவில்லை. இந்தச் சூழலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மூன்றாவது அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு யாருக்கு எந்த இலாகா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

கேபினட் அமைச்சர்கள் & இலாகாக்கள்
- பிரதமர் மோடி- அணுசக்தித் துறை, விண்வெளி துறை, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்
- ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத் துறை
- அமித் ஷா- உள்துறை, கூட்டுறவுத் துறை
- நிதின் கட்கரி- சாலை போக்குவரத்துத் துறை
- ஜேபி நட்டா- சுகாதார துறை, கெமிக்கல் மற்றும் உரத்துறை
- சிவராஜ் சிங் சவுகான்- வேளாண் துறை, ஊரக வளர்ச்சி
- நிர்மலா சீதாராமன்- நிதித் துறை, கார்பரேட் விவகாரம்
- எஸ் ஜெய்சங்கர்- வெளியுறவுத் துறை
- மனோகர் லால் கட்டார்- நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதித்துறை & மின் துறை
- எச்டி குமாரசாமி- கனரக தொழில்துறை மற்றும் இரும்புத்துறை
- பியூஷ் கோயல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
- தர்மேந்திர பிரதான்- கல்வித்துறை
- ஜிதன் ராம் மஞ்சி- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை
- லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங்- பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
- சர்பானந்தா சோனோவால்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை
- டாக்டர் வீரேந்திர குமார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
- கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்துத் துறை
- பிரகலாத் ஜோஷி- உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம்
- ஜுவல் ஓரம்- பழங்குடியினர் நலத்துறை
- கிரிராஜ் சிங்- ஜவளித்துறை
- அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே துறை, தகவல் & ஒளிபரப்புத்துறை
- ஜோதிராதித்ய சிந்தியா- தகவல் தொடர்பு துறை, வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.
- பூபேந்தர் யாதவ்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை
- கஜேந்திர சிங் ஷெகாவத்- கலாச்சார துறை & சுற்றுலாத்துறை
- அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்
- கிரண் ரிஜிஜு- நாடாளுமன்ற விவகார அமைச்சகம்
- ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியத்துறை
- மன்சுக் மாண்டவியா- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை
- ஜி கிஷன் ரெட்டி- நிலக்கரி துறை மற்றும் சுரங்கத்துறை
- சிராக் பாஸ்வான்- உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர்- ஜல் சக்தி அமைச்சர்.
- சிஆர் பாட்டீல்- ஜல்சக்தி துறை
தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவிகள் & இலாகாக்கள்
- ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை, திட்டமிடல் துறை
- ஜிதேந்திர சிங்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, புவி அறிவியல் துறை
- அர்ஜுன் ராம் மேக்வால்- சட்டம் மற்றும் நீதி துறை
- பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ்- ஆயுஷ் துறை
- ஜெயந்த் சவுத்ரி- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை
இணை அமைச்சர்கள் & இலாகாக்கள்
- ஜிதின் பிரசாத் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை (இணை அமைச்சர்)
- ஸ்ரீபாத் நாயக்- மின் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (இணை அமைச்சர்)
- பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை (இணை அமைச்சர்)
- கிரிஷன் பால் குர்ஜார்- கூட்டுறவுத்துறை (இணை அமைச்சர்)
- ராம்தாஸ் அத்வாலே- சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் (இணை அமைச்சர்)
- ராம் நாத் தாக்கூர்- வேளாண் துறை (இணை அமைச்சர்)
- நித்யானந்த் ராய்- உள் துறை (இணை அமைச்சர்)
- அனுப்ரியா பட்டேல்- சுகாதார துறை, கெமிக்கல் துறை (இணை அமைச்சர்)
- வி சோமண்ணா- ஜல்சக்தி, ரயில்வே துறை (இணை அமைச்சர்)
- டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி- ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்பு துறை (இணை அமைச்சர்)
- எஸ்பி சிங் பாகேல்- மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை, பஞ்சாயத்து ராஜ் துறை (இணை அமைச்சர்)
- ஷோபா கரந்த்லாஜே- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை (இணை அமைச்சர்)
- கீர்த்தி வர்தன் சிங்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வெளியுறவுத் துறை (இணை அமைச்சர்)
- பிஎல் வர்மா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்
- சாந்தனு தாக்கூர்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் போக்குவரத்து (இணை அமைச்சர்)
- சுரேஷ் கோபி- பெட்ரோலியத்துறை, சுற்றுலாத்துறை (இணை அமைச்சர்)
- எல் முருகன்- தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை (இணை அமைச்சர்)
- அஜய் தம்தா - சாலை போக்குவரத்துத் துறை (இணை அமைச்சர்)
- பாண்டி சஞ்சய் குமார்- உள்துறை (இணை அமைச்சர்)
- கமலேஷ் பாஸ்வான்- ஊரக வளர்ச்சித் துறை (இணை அமைச்சர்)
- பகீரத் சவுத்ரி- வேளாண் துறை (இணை அமைச்சர்)
- சதீஷ் சந்திர துபே- நிலக்கரி துறை, சுரங்கத்துறை (இணை அமைச்சர்)
- சஞ்சய் சேத்- பாதுகாப்பு துறை (இணை அமைச்சர்)
- ரவ்னீத் சிங் பிட்டு- உணவு பதப்படுத்துதல், ரயில்வே துறை (இணை அமைச்சர்)
- துர்கா தாஸ் உய்கே - பழங்குடியினர் விவகாரத் துறை (இணை அமைச்சர்)
- ரக்ஷா காட்சே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை
- சுகந்தா மஜும்தார்- கல்வித்துறை, வடகிழக்கு விவகாரங்கள் துறை
- சாவித்ரி தாக்கூர்- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
- டோகன் சாஹு- நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதித்துறை (இணை அமைச்சர்)
- ராஜ்பூஷன் சவுத்ரி- ஜல்சக்தி துறை (இணை அமைச்சர்)
- பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா- கனரக தொழில்துறை, இரும்பு துறை (இணை அமைச்சர்)
- ஹர்ஷ் மல்ஹோத்ரா- சாலை போக்குவரத்து துறை, கார்பரேட் விவகாரங்கள் துறை (இணை அமைச்சர்)
- நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை (இணை அமைச்சர்)
- முரளிதர் மோஹோல்- கூட்டுறவுத்துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை (இணை அமைச்சர்)
- ஜார்ஜ் குரியன்- சிறுபான்மையினர் விவகாரத் துறை, மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை (இணை அமைச்சர்)
- பபித்ரா மார்கெரிட்டா- வெளியுறவுத்துறை, ஜவளித்துறை (இணை அமைச்சர்)
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
செல்போனில் வந்த மர்ம லிங்கால் 12 லட்சத்தை இழந்த எம்எல்ஏ.. பவன் கல்யாண் ஆதரவாளர் ஏமாந்தது எப்படி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications