மணீஷ் சிசோடியா ரெய்டு.. பாஜக சொன்ன வினோத குற்றச்சாட்டு! நியூயார்க் டைம்ஸே நேரடியாக தந்த விளக்கம்!
டெல்லி: ஆம் ஆத்மி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறித்த நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை பெய்ட் நியூஸ் என பாஜக விமர்சித்த நிலையில், இதற்கு அந்த நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
யூனியன் பிரதேசமான டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. டெல்லி மொத்தம் 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
இருப்பினும், இதில் மிகப் பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் கிளம்பின. இதில் பல விதிமீறல்கள் அரங்கேறி உள்ளதாக பாஜக குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தது.

என்ன பிரச்சினை
இதையடுத்து இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யத் தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டார். தலைமைச் செயலாளர் அளித்த அறிக்கையில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு இருந்த நிலையில், இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்குத் துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.

ஊழல் குற்றச்சாட்டு
மேலும் கலால் துறையில் 11 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே டெல்லி அரசின் புதிய மது கொள்ளைக்கு ஆளுநர் அனுமதி தராததால், இதை வாபஸ் பெறுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா ஊழல் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாஜக கூறி வந்தது.

குற்றச்சாட்டு
இந்தச் சூழலில் தான் நேற்று மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக சிபிஐ கூறுகின்றனர். இதற்கிடையே சர்வதேச பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸ் மணீஷ் சிஷோடியாவை பாராட்டி முதல் பக்க கட்டுரை வெளியிட்டதைப் பொறுத்துக் கொள்ளாமலேயே மத்திய அரசு இந்த ரெய்டை அரங்கேற்றி உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால் குற்றஞ்சாட்டி இருந்தார்.

விமர்சனம்
இருப்பினும், இது பெய்ட் நியூஸ், அதாவது ஆம் ஆத்மியே பணம் செலுத்தி வெளியிடப்பட்ட செய்தி என பாஜக கூறி இருந்தது. சிசோடியா பற்றிய நியூயார்க் டைம்ஸ் மற்றும் கலீஜ் டைம்ஸ் கட்டுரைகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், இதில் இருந்து இது பெய்ட் நியூஸ் என தெரிவித்ததாகவும் சாடி இருந்தது. இதற்கு ஏற்கனவே ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்து இருந்தது. நியூயார்க் டைம்ஸ் செய்தியாளரே அந்த கட்டுரையை எழுதி உள்ளதாகவும் அதற்கும் ஆம் ஆத்மிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி இருந்தது.

விளக்கம்
இந்தச் சூழலில் நியூ யார்க் டைம்ஸ் சார்பிலேயே இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தித் தொடர்பாளர் நிக்கோல் டைலர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "டெல்லி கல்வி முறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றிய எங்கள் அறிக்கை, பாரபட்சமற்ற இல்லாத ஒன்று. கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்த பின்னரே இந்த கட்டுரையை வெளியிட்டோம்.

நேரடி விளக்கம்
மேலும் கல்வி என்பது நியூயார்க் டைம்ஸ் பல ஆண்டுகளாகக் கவர் செய்து வரும் ஒரு பிரச்சினை. தி நியூயார்க் டைம்ஸின் பத்திரிகை எப்போதும் சுதந்திரமானது, அரசியல் அல்லது விளம்பரதாரர்களுக்கும் நாங்கள் வெளியிடும் செய்தி அல்லது கட்டுரைகளுக்கும் எவ்வித நேரடி அல்லது மறைமுக தொடர்பு இல்லை" என்று அவர் கூறி உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications