செம ட்விஸ்ட்.. எனக்கு இல்லாத பதவி சித்தராமையாவுக்கு வேண்டாம்! கார்கேவை முதல்வராக்கும் சிவக்குமார்?
டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு வழங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் டிகே சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் தனக்கு கிடைக்காத முதல்வர் பதவி சித்தராமையாவுக்கும் கிடைக்க கூடாது என்ற ரீதியில் மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராகும்படி டிகே சிவக்குமார் வலியுறுத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கர்நாடகா அரசியலில் பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இறுதியாக சித்தராமையாவின் பெயர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையாவை நியமனம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக இன்று ராகுல் காந்தியை, சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசிய பிறகு இந்த தகவல் வெளியாகி உள்ளது. சித்தராமையாவுக்கு ‛ஆல் தி பெஸ்ட்' கூறி முதல்வர் பதவி அவருக்கு வழங்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாறாக இந்த சந்திப்பின்போது டிகே சிவக்குமாரை ராகுல் காந்தி சமாதானப்படுத்தி உள்ளதாகவும், வரும் காலத்தில் முதல்வர் பதவியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டிகே சிவக்குமார் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கேவை தனது தம்பியும் பெங்களூர் புறநகர் எம்பியுமான டிகே சுரேசுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு வழங்க டிகே சிவக்குமார் விரும்பவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனக்கும் கட்சி மேலிடம் முதல்வர் பதவியை வழங்க மறுப்பதால், அவர் புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வர் பதவிக்கு களமிறங்கும்படி டிகே சிவக்குமார் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது எனக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவே கூடாது என்ற ரீதியில் டிகே சிவக்குமார் இந்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறை கண்டிப்பாக முதல்வர் பதவியை எனக்கு வழங்க வேண்டும். கட்சிக்காக பல தியாகங்களை செய்துள்ளேன். பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் கட்சியின் எம்எல்ஏக்களை காப்பாற்றி உள்ளேன் என டிகே சிவக்குமார் கூறியும் அவரது பேச்சை கட்சி மேலிடம் கேட்கவில்லை என்பதால் தான் டிகே சிவக்குமார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டிகே சிவக்குமார், ‛‛எனக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால், சித்தராமையாவுக்கும் வழங்க கூடாது. அதற்கு பதிலாக நீங்களே முதல்வராக பொறுப்பு ஏற்று கொள்ளுங்கள்'' என மல்லிகார்ஜூன கார்கேவிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விஷயத்தை அவர் கட்சி மேலிட தலைவர்களிடம் கூறியுள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதான் தற்போது கர்நாடகா அரசியலில் பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பதை தீர்மானிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications