சேப்பாக்கம் – சேஶ்ரீ, பாக்கியராஜ் - ஶ்ரீக்கியராஜ்.. போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் மோதலை தொடர்ந்து ‛மைசூர்பாக்' இனிப்பின் பெயரை ‛மைசூர் ஸ்ரீ' என்று மாற்றி விற்பனை செய்யப்பட்டுவது சமூகவலைதளங்களில் வைரலானது. இதேபோல பாக் என உள்ள மற்ற பெயர்களை ஶ்ரீ என மாற்றினால் எப்படியிருக்கும் என்று நெட்டிசன்களின் பதிவுகள் சமூகவலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 26 அப்பாவி மக்கள் பலியாகினர். இதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா தரப்பில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 ஆம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொள்ளவே போர் பதற்றம் உருவானது. ஒரு வழியாக இரண்டு நாடுகள் இடையே போர் நிறுத்த உடன்பாடும் ஏற்பட்டுவிட்டது. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பதை போல, இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி போர் முடிவுக்கு வந்தாலும் வார்த்தை போர் முடிவுக்கு வந்த பாடில்லை.
பாகிஸ்தானை புறக்கணிப்போம் என்ற வலதுசாரிகள் மற்றும் தேசியவாதிகள் முழக்கம் வைத்து வருகிறார்கள். அந்தவகையில் ராஜ்தானில் உள்ள பிரபல இனிப்புக்கடை ஒன்று புகழ்பெற்ற 'மைசூர் பாக்' இனிப்பு வகையின் பெயரை 'மைசூர் ஸ்ரீ' என மாற்றி விற்பனை செய்கிறார்கள். 'மைசூர் பாக்' என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதால் இந்த மாற்றத்தை அமல்படுத்தியுள்ளனர்.

இது மைசூர் பாகுடன் நிற்காமல் கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் உள்ளிட்ட பல இனிப்பு வகைகளின் பெயர்களில் 'பாக்' நீக்கப்பட்டு 'ஸ்ரீ' என்ற பெயரை இணைத்து மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பெயர் மாற்றம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில நெட்டிசன்கள் ஒருபடி மேலே சென்று, இந்த மாற்றம் பாக் என்று முடியும் மற்ற வார்த்தைகளில் அமல்படுத்தினால் எப்படி இருக்கும் என்று பதிவிட்டு வருகிறார்கள். இதுதான் தற்போது சமூகவலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. சோழவரத்தான் என்பவர், "அப்படியென்றால் இன்று முதல் சேப்பாக் - சேஶ்ரீ." என்று அன்போடு அழைக்கப்படும் என்று பதிவு செய்துள்ளார்.

சிட்டுக்குருவி என்ற எக்ஸ் பக்கத்தில், "பாக்கியராஜ் - ஶ்ரீக்கியராஜ், பாக்கியம் - ஶ்ரீக்கியம் என்று கமென்ட் செய்யப்பட்டுள்ளது. அடலேறு என்ற பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியலை ஶ்ரீக்கியலட்சுமி என்று மாற்றிவிடலாம்." என கிண்டலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரின் பெயர்களையும் மாற்றி நெட்டிசன்கள் அதகளம் செய்கிறார்கள்.

இளையவன் / Balaji என்பவரின் எக்ஸ் பக்கத்தில், "பெரும்பாக்கம் - பெரும்ஶ்ரீகம், கோடம்பாக்கம் . கோடம்ஶ்ரீகம், நுங்கம்பாக்கம் - நுங்கஶ்ரீகம், ஆதம்பாக்கம் - ஆதம்ஶ்ரீகம், கீழ்பாக்கம் - கீழ்ஶ்ரீகம், அச்சரபாக்கம் - அச்சரஶ்ரீகம், கல்பாக்கம் - கல்ஶ்ரீகம், மாம்பாக்கம் - மாம்ஶ்ரீகம். இன்னமும் என்ன என்ன பாக்'க Sorry ஶ்ரீக போறோமோ." என்று பதிவு செய்துள்ளார்.

இன்னும் சிலர், "தமிழ்நாட்டில் ஶ்ரீ என்கிற வார்த்தை பயன்படுத்த மாட்டோம். அதனால் 'பாக்' என்று வரும் வார்த்தைகளில் இனி 'திரு' என்று அழைக்கலாம்." என்று பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications