ஒரே போடு.. எச்சரித்த இந்தியா.. சட்டென வழிக்கு வந்த 8 ஐரோப்பிய நாடுகள்.. கோவிஷீல்டுக்கு "கிரீன் பாஸ்"
டெல்லி: ஐரோப்பா யூனியனுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தியா பேசி இருந்த நிலையில் தற்போது 8 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சின் போட்டவர்களுக்கு கிரீன் பாஸ் வழங்க அனுமதி அளித்துள்ளது.
ஐரோப்பாவில் தற்போதைய நிலைப்படி 4 வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபைசர் , மாடர்னா, லண்டன் வகை ஆஸ்டர்செனகா, ஜான்சனன் ஜான்சன் வேக்சின் ஆகிய வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் தற்போதய நிலைப்படி 4 வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபைசர் , மாடர்னா, லண்டன் வகை ஆஸ்டர்செனகா, ஜான்சனன் ஜான்சன் வேக்சின் ஆகிய வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி
அதன்படி இந்த 4 வேக்சினை போட்ட வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கிரீன் பாஸ் அளிக்கப்படும். மற்றவர்களுக்கு ஐரோப்பாவில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த லிஸ்டில் இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்ட் இடம்பெறவில்லை. கோவிஷீல்ட் வேக்சின் ஆஸ்டர்செனகா வேக்சின் என்றாலும் கூட, அதன் லண்டன் உற்பத்திக்கு அனுமதி அளித்துவிட்டு, சீரம் நிறுவன உற்பத்திக்கு ஐரோப்பா அனுமதி மறுத்துள்ளது.

கோபம்
கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு வேக்சினுக்கும் ஐரோப்பா அனுமதி மறுத்தது இந்தியாவை கோபப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் போட்டவர்களை ஐரோப்பாவில் அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு குவாரன்டைன் விதி கட்டாயமாக்கப்படும் எங்கள் வேக்சினை அனுமதித்தால் மட்டுமே உங்களின் வேக்சினை அனுமதிப்போம், இல்லையென்றால் உங்கள் வேக்சினுக்கும் எங்கள் நாட்டில் அனுமதி இல்லை என்று ஐரோப்பாவிடம் இந்தியா கடுமையாக தெரிவித்தது.

மாற்றம்
ஐரோப்பாவை வெளிப்படையாக எதிர்த்து முதல்முறை இந்தியா இப்படி பேசியது. இந்த நிலையில் 8 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சின் போட்டவர்களுக்கு கிரீன் பாஸ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜெர்மனி, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளித்துள்ளது.

கிரீன் பாஸ்
இதனால் கோவிஷீல்ட் பெற்றவர்கள் இந்த 8 நாடுகளுக்கு செல்ல கிரீன் பாஸ் பெற முடியும். முன்னதாக யூனியனில் உள்ள உறுப்பு நாடுகள் வேறு நாட்டு வேக்சின்களுக்கு அனுமதி அளிக்க விரும்பினால் அளிக்கலாம் என்று ஐரோப்பா யூனியன் தெரிவித்தது. இதையடுத்து இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சினுக்கு 8 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் அனுமதி அளித்துள்ளது.
Recommended Video

என்ன நிலை
முன்னதாக கோவிஷீல்ட் வேக்சினை ஐரோப்பா யூனியன் அனுமதிக்க விண்ணப்பித்து இருப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அப்படி விண்ணப்பம் எதுவும் வரவில்லை என்று ஐரோப்பா யூனியன் தெரிவித்தது. இந்த நிலையில் கோவிஷீல்ட் என்பது ஆஸ்டர் செனகா வேக்சின்தான் என்பதால் இதற்கு விரைவில் ஐரோப்பா யூனியன் அனுமதி கிடைக்கும் என்று அடர் பொன்வல்லா தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications