விடாத பாஜக.. தாஜ்மஹால் பெயரை ‛தேஜோ மஹாலயா’ என மாற்றியே ஆகணும்.. மீண்டும் கிளம்பும் சர்ச்சை
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹாலின் பெயரை ‛தேஜோ மஹாலயா' என பெயர் மாற்ற வேண்டும் எனும் சர்ச்சை மீண்டும் பாஜகவால் எழுந்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதலின் நினைவு சின்னமாகவும் தாஜ்மஹால் உள்ளது. டெல்லி அருகே ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையோரம் தாஜ்மஹால் அமைந்துள்ளது.
முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக இந்த தாஜ்மஹாலை கட்டினார். இந்நிலையில் தான் சமீபகாலமாக தாஜ்மஹால் தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

சமீபத்திய சர்ச்சை
பாஜக எம்பி தியாகுமாரி சமீபத்தில் பேசுகையில், ‛‛தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் உள்ளன. தற்போது நீதிமன்றம் இதுதொடர்பான ஆவணங்களை கேட்டால் நாங்கள் வழங்க உள்ளோம்'' என தெரிவித்தார். மேலும் தேஜோலாயா எனும் சிவன் கோயிலை இடித்து தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜகான் கட்டியதாகவும், தாஜ்மஹாலின் ரகசிய அறையில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.

புதிய சர்ச்சை
இந்நிலையில் தான் தற்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது தாஜ்மஹாலின் பெயரை ‛தேஜோ மஹாலயா' என மாற்ற வேண்டும் என ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் பாஜக கவுன்சிலர் ஷோபராம் ரத்தோர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று அவர் முன்மொழிவு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

விவாதிக்க வாய்ப்பு
தற்போது இதற்கான முன்மொழிவை அவர் தீவிரமாக தயாரித்து வரும் நிலையில் அடுத்த கூட்டத்தில் இது முனிசிபல் கார்ப்ரேஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு இதுதொடர்பாக விவாதம் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் தாஜ்மஹாலின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் பாஜகவினர் தீவிரமாக உள்ளது தெரியவந்துள்ளது.

மறுத்த உயர்நீதிமன்றம்
முன்னதாக தாஜ்மஹாலில் உள்ள 22 பூட்டிய ரகசிய அறைகளை திறக்க கோரிய பொது நல வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக பாஜகவினர் தாஜ்மஹால் தொடர்பான விஷயங்களை பேசி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட உத்தர பிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசால் 'ராம் மஹால்' எனப் பெயர் மாற்றப்படும் என்று பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications