மிரட்ட கூடாது.. அவமானப்படுத்த கூடாது.. கடன் வாங்கியவரிடம் பணம் வசூலிப்பது எப்படி? RBI புது ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடன் வாங்கியவர்களிடம் எப்படி அந்த தொகையை வங்கி, தனியார் நிதி நிறுவன நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும். பொதுமக்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்? எந்த நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்? வீட்டுக்கு செல்லலாமா? என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிகளை விதிகளை வகுத்து வழங்கி உள்ளது. அதன்படி வாக்குவாதம் செய்வது, மிரட்டல் விடுப்பது, இரவு நேரத்தில் போன் செய்வது, வீடுகளுக்கு செல்வது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு விவரம் வருமாறு:

வங்கிகளில் கடன் வாங்கும் பொதுமக்களில் ஒரு தரப்பினர் அதனை தாமதமாக செலுத்துவதும், இழுத்தடிப்பது ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த சமயத்தில் வங்கியில் இருந்து வரும் ஏஜென்ட்டுகள் அவர்களிடம் வாக்குவாதம் செய்வது, மிரட்டல் விடுப்பது, திட்டி அவமானப்படுத்தி பணம் வசூலிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

RBI release new loan

இந்நிலையில் தான் ரிசர்வ் வங்கி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கடனை எப்படி ஏஜென்ட்டுகள் வசூலிக்க வேண்டும் என்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடன் வாங்கி மாத தவணை செலுத்த தவறிய மக்களை கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிதிறுவனங்கள் துன்புறுத்துவதை தவிர்க்கும் வகையில் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தி விதிகள் 2027 ம் தேதி ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மிரட்டல் விடுக்க கூடாது

* அதன்படி கடன் தொகையை வசூலிக்கும் ஏஜென்ட்டுகள் மிரட்டல் விடுப்பது, வாக்குவாதம் செய்வது, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.
* செல்போனில் தொடர்பு கொள்ளும்போதும் மிரட்டல் தொனியில் பேசக்கூடாது.
* பொதுவெளியில் நிற்க வைத்து அவமானப்படுத்துவது, அவர்களின் குடும்பத்தினரின் நற்பெயரை களங்கம் விளைவிக்கும் செயல்களி்ல் ஈடுபட கூடாது.

காலை 8 மணி டூ மாலை 7 மணி

* காலை 8 மணி முதல் மாலை 7 மணிக்குள் மட்டுமே கடன் வாங்கியவர்களை ஏஜென்ட்டுகள் தொடர்பு கொள்ள வேண்டும். அதன்பிறகு தொடர்பு கொள்ள கூடாது. ஒருவேளை கடன் வாங்கியவர் குறிப்பிட்ட நேரத்தை கூறியிருந்தால் அந்த நேரத்தில் தொடர்பு கெள்ளலாம்.
* இறப்பு, மருத்துவ அவசரநிலை அல்லது திருமண விழா போன்ற உணர்வு சார்ந்த சமயங்களில் கடன்கள் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.

வீட்டுக்கு செல்லலாமா?

* கடன் வாங்கியவர்களின் போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது.
* கடன் வாங்கியவரின் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு நாளுக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டுக்கு செல்லும் ஏஜென்ட்டின் பெயர் விவரங்களை வழங்க வேண்டும்.* கடன் வாங்கியவர் விரும்பும் பட்சத்தில் வீட்டை தவிர வேறு இடத்திலும் சந்திக்கலாம். கடன் வாங்கியவர் எந்த இடத்தையும் சொல்லாத பட்சத்தில் வீடு அல்லது பணி செய்யும் இடத்திற்கு செல்லலாம்.
* கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகள் தங்களின் அடையாள அட்டை, கடன் பத்திரம், தொடர்புடைய அறிவிப்பு உள்பட பிற ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அதில் குறைதீர் அதிகாரியின் தொடர்பு எண் இருக்க வேண்டும்.

6 மாத ரெக்கார்ட் அவசியம்

* கடன் வாங்கியவரை தொடர்பு கொண்ட நேரம், எத்தனை முறை தொடர்பு கொண்ட எண்ணிக்கை உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட வங்கிகள், நிறுவனம் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை பராமரிக்க வேண்டும்.

* வங்கி பிற நிறுவனம் மூலமாக கடன் வசூலிப்பு பணியை மேற்கொண்டால் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை உன்னிப்பாக கண்காணித்து விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

* கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு முறையான பயிற்சி வழங்கி விதிகளை சொல்லி கொடுக்க வேண்டும். பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்க வேண்டும்.

இஎம்ஐ–யில் வாங்கி பொருள் என்றால்..

* கடன் வாங்கியவர்களின் நிலுவை தொகையை வசூலிக்க தேவையான தகவல்களை மட்டுமே ஒவ்வொரு ஏஜென்ட்டுகளும் வைத்திருக்க வேண்டும். பிற தனிப்பட்ட விவரங்களை அவர்களிடம் வங்கிகள் வழங்க கூடாது.

* கடன் வாங்கி ஸ்மார்ட்போன், டேப்லேட், லேப்டாப் வாங்கிய பிறகு அந்த நபர் தவணை கட்ட தவறினால் அதனை உடனடியாக முடக்க கூடாது. தவணை தொகையை செலுத்த தவறி 60 நாட்கள் கடந்தால் தான் அதனை முடக்க வேண்டும். அதுவும் கடன் வாங்கி வாங்கிய ஸ்மார்ட்போன், டேப்லேட், லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே பொருந்தும். அந்த நபரின் பிற கேஜெட்டுகளுக்கு பொருந்தாது. மேலும் கடன் தொகையை செலுத்திவிட்டால் அடுத்த ஒரு மணிநேரத்தில் அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதன்பிறகு தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கடன் வாங்கியவர் ரூ. 250 இழப்பீடு பெற உரிமை உண்டு என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+