"அணு ஆயுத மிஸைல்".. துல்லிய தாக்குதல்.. இந்தியாவின் "அக்னி பிரைம்" ஏவுகணை சோதனை வெற்றி.. அடிதூள்!
டெல்லி: அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி ( Agni-P அல்லது Agni - Prime) ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசாவின் கடற்கரை பகுதியில் டிஆர்டிஓ மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது.
Recommended Video
இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குவதில், அக்னி ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்னி 1 ஏவுகணை தொடங்கி அக்னி 5 ஏவுகணை வரை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து, இந்திய ராணுவத்தோடு இணைந்துள்ளது.
இதில் அக்னி 6 ஏவுகணை அதிகபட்சம் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. அக்னி 6 இன்னும் முழுமையாக சோதனை செய்யப்படவில்லை.

அக்னி
இந்த நிலையில் அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பிரைம் ( Agni-P) ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசாவில் இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. அணு ஆயுதத்தை ஏந்தி சென்று தாக்கும் திறன் கொண்டதாகும் இது. இந்த ஏவுகணை முழுக்க முழுக்க காம்போசைட் மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்.

முழு வெற்றி
திட்டமிட்டபடி மிக துல்லியமாக, எந்த பிரச்சனையும் இன்றி இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதாக மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இருக்கும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

துல்லியம்
பல்வேறு ரேடார்களை வைத்து இந்த ஏவுகணையின் பாதை, வேகம், துல்லியத்தை சோதித்துள்ளனர். இதில் அக்னி பி ஏவுகணை அனைத்து டெஸ்ட்களிலும் சிறப்பாக, துல்லியமாக செயல்பட்டதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகைதான் அக்னி பி ஏவுகணை ஆகும். நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக வைத்து, எங்கிருந்தும் இந்த அக்னி பி ஏவுகணையை ஏவ முடியும்.

எங்கும்
சாலையில் இருந்தும் கூட ஏவும் அளவில் அக்னி பி வகை ஏவுகணை எளிதானது. இந்தியாவின் எந்த மூலைக்கும் அக்னி பி ஏவுகணையை கொண்டு செல்ல முடியும். அக்னி பி ஏவுகணை 1000-2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியது. அக்னி 3 ஏவுகணையின் எடையில் பாதி எடை கொண்டது. இதன் propulsion சிஸ்டம் புதிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்
4000 கிமீ தூரம் சென்று தாக்க கூடிய அக்னி 4, 5000 கிமீ தூரம் சென்று தாக்க கூடிய அக்னி 5 ஆகிய ஏவுகணைகளின் தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் இருக்கும் எதிரி நாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையில் அக்னி பி ஏவுகணையை பயன்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications