காங்கிரசுக்கு சங்கடம்.. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட மணிஷ் திவாரி மறுப்பு
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கடிதத்தில் கையெழுத்திட காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிஷ் திவாரி மறுத்துள்ளார்.
டெல்லி : மத்திய அரசு அறிமுகப் படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு, பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. ரயிலுக்கு தீ வைத்தல் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. ஒருவார காலமாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, இந்தத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தின.
எனினும் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறமுடியாது என்று தெரிவித்ததோடு, இதற்கான ஆள்சேர்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ஏழரை லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அக்னிபாத் திட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஆதரித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான மணீஷ் திவாரியால், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சமர்ப்பித்த கடிதத்தில் கையெழுத்திட மணீஷ் திவாரி மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் சக்திசிங் கோஹில், திரிணாமுல் காங்கிரசின் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் சௌகதா ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் ஏ.டி. சிங் உள்ளிட்ட 6 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications