அகமதாபாத் விமான விபத்து.. டேக் ஆஃபான அந்த நொடி.. சிக்னலை இழந்த ஏர் இந்தியா விமானம்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மேகானி நகரில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தில் மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே சிக்னலை இழந்தது தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பைலட், 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என்று மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலெயே விமான நிலையம் அருகில் இருந்த மேகானி நகரின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

Ahmedabad Plane Crash Air India Flight Loses Signal After Takeoff from Ahmedabad

விமான விபத்து

விமானம் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், மக்களிடையே அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் குடியிருப்பு பகுதியில் விழுந்த அந்த நொடியில் விமானம் வெடித்து அந்த இடமே புகைமூட்டமாக மாறி இருக்கிறது. விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்ததால், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமித் ஷா ஆலோசனை

இதனைத் தொடர்ந்து உடனடியாக விமானத்தில் பயணித்த பயணிகளை மீட்க மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். மீட்கப்படும் பயணிகள் பலரும் விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 30க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சிக்னல் இழப்பு

இதனிடையே விமானத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் 1.30 மணிக்கு புறப்பட்ட நிலையில், சில நொடிகளிலேயே சிக்னலை இழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. விமான நிலையத்தில் 23வது ரன் வேயில் இருந்து புறப்பட்ட சில நொடியிலேயே சிக்னலை இழந்துள்ளது.

அனுபவம் வாய்ந்த கேப்டன்

விமானம் புறப்படுவதற்கு முன்பாக பல்வேறு கட்ட சோதனைகள் செய்யப்படும் நிலையில், புறப்பட்ட நொடியிலேயே விமானம் சிக்னலை இழந்தது எப்படி என்பது கேள்வியாகி இருக்கிறது. மேலும், விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவருக்கு சுமார் 8200 மணி நேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+