AI இன்னும் 10 ஆண்டுகளில் மனித இனத்தையே அழிக்கலாம்.. பெரிய ஆபத்து இருக்கு! டாப் ஆய்வாளர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடுத்த 10 ஆண்டுகளில் மனித இனத்தையே அழிப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாக கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி விஞ்ஞானி அலெக்ஸ் டர்னர் எச்சரித்துள்ளார். மனிதர்களின் அறிவுறுத்தல் இல்லாமலேயே AI இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் நாம் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சாக இருக்கிறது. இதற்கிடையே டெல்லியில் ஆங்கில ஊடகமான என்டிடிவி நடத்திய நிகழ்ச்சியில் கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி விஞ்ஞானி அலெக்ஸ் டர்னர் கலந்த கொண்டார்.

Ex-Google DeepMind Scientist

ஏஐ எச்சரிக்கை

எச்சரிக்கை: AI மனித இனத்தை அழித்துவிடுமா? என்ற தலைப்பிலான அமர்வில் பேசிய டர்னர், ஏஐ குறித்து பல முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அங்கு பேசிய அவர், "இப்போது நாம் உருவாக்கி கொண்டிருக்கும் முறையிலேயே AIஐ தொடர்ந்து உருவாக்கினால் சிக்கல் தான்.. அதிக சக்திவாய்ந்த AI அமைப்புகளை உருவாக்குவதில் நிறுவனங்கள் காட்டும் வேகம், அவற்றை பாதுகாப்பாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மிஞ்சிவிடும்" என்றார்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடுத்த 10 ஆண்டுகளில் மனித இனத்தையே அழிப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.. மனிதர்களின் அறிவுறுத்தல் இல்லாமலேயே AI இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

புரிந்து கொள்ள முடியாது

அவர் மேலும், "ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டாலே அது எப்படி செயல்படுகிறது என்பதை நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுவது தவறு. பாலம் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும்போது அவற்றின் பண்புகளை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், AI அமைப்புகளை உருவாக்குவதால் மட்டுமே அதை நாம் முழுமையாக புரிந்து கொண்டோம் என சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களுக்கே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட ஏஐ செயல்படும்.

AI அமைப்புகள் தாங்கள் கண்காணிக்கப்படுவதை அறிந்திருக்கும்போது ஒரு விதமாகவும், கண்காணிப்பு இல்லை என்றால் வேறு விதமாகவும் செயல்படும் ஆபத்து இருக்கிறது. எனவே, சோதனையை மட்டுமே வைத்து கொண்டு, எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும் என சொல்லிவிட முடியாது. ஏஐ எப்போதும் மனிதர்களின் நலனை உறுதி செய்ய செயல்படுகிறது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

ஏஐ வேகம்

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட டர்னர், அது பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரித்தார். அதாவது, AIயின் முன்னேற்றம் பல மடங்கு வேகமாக போகலாம் எனவும், மனிதர்கள் அதற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையை உருவாக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும், "ஏஐ லேப் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் தனது அனுபவத்தை என்னிடம் சொன்னார். அதாவது AI உருவாக்கும் பணிகளை ஆராய்ச்சியாளர்கள் நேரடியாக சரிபார்ப்பதில்லையாம். அதற்கு பதிலாக, முதல் AI என்ன செய்கிறது என்பதை கண்காணிக்க மற்றொரு AI அமைப்பை உருவாக்குகிறார்கள். அதாவது ஏஐ தான் இன்னொரு ஏஐயை கண்காணிக்கிறது. இது முழுமையான தீர்வாக இருக்கவே இருக்காது" என்றார்.

கடும் தாக்கு

பெரிய AI நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை என்றும் டர்னர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர், "பெரிய புகையிலை நிறுவனங்களும் முதலில் தங்களது புகையிலை பொருட்கள் குறித்து மக்களிடம் பொய் சொல்லின. ஆனால், அது பல மனிதர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தது. இப்போது பெரிய AI நிறுவனங்களும் அதையே செய்கின்றன" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+