நடுவானில் குறைந்த "காற்றின் அழுத்தம்!" பயணிகளுக்கு மூச்சு திணறல்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே விமானங்களில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக அவை எல்லாம் சிறு பிரச்சினைகளாகவே உள்ளன.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை. ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது.

விமானம்
இந்தச் சூழலில், இப்போது ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானத்திலும் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. துபாயில் இருந்து கொச்சிக்கு 258 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் நடுவானில் திடீரென பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா
நடுவானில் பறந்து கொண்டு இருக்கும்போது விமானத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் திடீரென குறையத் தொடங்கி உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787 ரக விமானம் பத்திரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. கேபினில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகள் ஆக்ஸிஜன் மாஸ்க்கள் மூலம் சுவாசிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

பத்திரமாகத் தரையிறங்கியது
நல்வாய்ப்பாக இந்த விமானம் மும்பையில் பத்திரமாகத் தரையிறங்கியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கேபினில் இருக்கும் காற்றின் அழுத்தம் திடீரென குறைவது முக்கிய பிரச்சினை ஆகும். நடுவானில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படும்போது, பயணிகளுக்கு மூச்சுத் திணறலும் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

மாற்று விமானம்
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாற்றால் விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. "போயிங் 787 விமானம் 247 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் இரவு 7:12 மணிக்கு மும்பையில் பத்திரமாகத் தரையிறங்கியது. இதையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் மும்பையில் இருந்து கொச்சிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications