அதிமுக ஈபிஎஸ்க்கு தானா? சிவசேனா விஷயத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை கவனிச்சீங்களா! விழிக்கும் ஓபிஎஸ்!ஆஹா
மகாராஷ்டிராவில் உண்மையான சிவசேனா யார்? என்பது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முக்கிய உத்தரவை பிறப்பித்தது.
டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஆண்டு இரண்டு அணியாக பிரிந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வந்தது. இருதரப்பும் உண்மையான சிவசேனா என உரிமை கோரியதோடு, கட்சியின் வில் அம்பு சின்னத்தை கைப்பற்ற முயற்சி செய்தது. இந்நிலையில் தான் நேற்று உண்மையான சிவசேனா என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான். அவர்கள் தான் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த உத்தரவை நன்கு கவனித்து பார்த்தால் அதிமுகவில் நிலவும் பிரச்சனைக்கு நடுவே தேர்தல் ஆணையத்தின் இரட்டை இலை சின்னம், உண்மையான அதிமுக தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது ஓ பன்னீர் செல்வத்தை விட எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தலைவராகவும் முதல்வராகவும் உத்தவ் தாக்கரே இருந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அணியும், பாஜகவும் இணைந்து ஆட்சியை அமைத்தது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார். இந்நிலையில் தான் உண்மையான சிவசேனா யார்? என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே அணிகள் இடையே போட்டி ஏற்பட்டது.

உண்மை சிவசேனா ஷிண்டே
இதையடுத்து சிவசேனாவின் சின்னம் முடக்கம் செய்யப்பட்டது. சிவசேனா கட்சி மற்றும் அதன் வில் அம்பு சின்னத்துக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினர். இதுதொடர்பாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. இந்நிலையில் தான் உண்மையான சிவசேனா என்பது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் என அங்கீகரித்தது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கப்படும் என அறிவித்தது. இது ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பெரிய வெற்றியாகும். மாறாக உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணிக்கு கடும் பின்னடைவாகும்.

எம்எல்ஏ, எம்பிக்கள் ஆதரவுப்படி
இந்த உத்தரவு என்பது ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் பக்கம் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது சிவசேனா சார்பில் 55 பேர் எம்எல்ஏக்களான நிலையில் இதில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே அணியிலும், 15 பேர் உத்தவ் தாக்கரேவுடனும் உள்ளனர். மாறாக சிவசேனா 18 எம்பிக்களில் 13 பேர் ஏக்நாத் ஷிண்டேவுடனும், 5 பேர் உத்தவ் தாக்கரே உடனும் உள்ளனர். இந்த எம்எல்ஏ, எம்பி மற்றும் தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்து கொண்டது. இதில் உத்தவ் தாக்கரேவை விட ஏக்நாத் ஷிண்டே தான் முன்னணியில் இருந்தது. அதனடிப்படையில் தான் உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தான் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக விவகாரம் என்னவாகும்?
இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் உற்று கவனிக்க தொடங்கி உள்ளனர். அதாவது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. மாறாக இடைக்கால நிவாரணமாக உச்சநீதிமன்றம் பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வு செய்ய கூறியது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் அவரது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகம்
இந்த தேர்தல் முடிந்த பிறகும் கூட உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு உடனே வெளியாகாமல் இருக்கும்பட்சத்தில் தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பு நாடி ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க கோரினால் அது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது தற்போது சிவசேனா கட்சியை பால் தாக்கரே தொடங்கிய நிலையில் அவரது மகன் உத்தவ் தாக்கரே தலைவராக இருந்தார். இந்நிலையில் தான் கட்சி எம்பி, எம்எல்ஏக்களின் ஆதரவு யார் பக்கம் அதிகம் உள்ளது என்பது கீ பாய்ண்டாக இந்திய தேர்தல் ஆணையம் பார்த்து உண்மையான சிவசேனா என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான் என கூறியுள்ளது. அப்படிப்பார்த்தால் தற்போதைய சூழலில் ஓ பன்னீர் செல்வத்தை காட்டிலும், எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் தான் எம்பி, எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். இதனால் சிவசேனா கட்சி சந்தித்த நிலையை அதிமுக எட்டினால் அது ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications