"திமுக கொடுத்த நெருக்கடி" டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி திடீரென ஆலோசனை
டெல்லி: டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனியார் நட்சத்திர விடுதியில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். டெண்டர் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் பற்றிய பாஜக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருக்கிறார்.

இன்று காலை டெல்லி வந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுனர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
டெண்டர் முறைகேடு வழக்கை மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை இந்த வழக்கு ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications