அவசர அவசரமா "டெல்லி விசிட்.." எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் சந்திப்பு.. ஆலோசிக்கப்பட்டது என்ன?
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளது. இது ஒருபக்கம் இருக்க கடந்த சில தினங்களாகவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை தேசிய அளவில் விவாதப்பொருளாக கொண்டு சென்ற பாஜக, அதை வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இப்படியாக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை இலைமறைக்காயாய் பேசப்பட துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் தொடர்பாக பாஜக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் அமித்ஷா- எடப்பாடி சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பற்றிய ஆலோசனை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் மாநில பாஜக தலைமைக்கும் கூட்டணிக்கு யார் தலைமை என்பது தொடர்பாக அவ்வப்போது வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு கூட்டணிக்குள்ளும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications