Tamil Nadu Exit Poll: அதிமுகவுக்கு பெரிய அடி? முந்தும் பாஜக! சீட், வாக்கு சதவீதம் 2லும் பின்னடைவு!
டெல்லி: தமிழ்நாட்டில் அதிமுக இந்த லோக்சபா தேர்தலில் பெரும் அடியைச் சந்திக்கும் எனக் கணித்துள்ளது இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வந்த மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்று இறுதிகட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அனைத்து கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள், தேர்தல் கணிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா? எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியால் இந்த முறை பாஜகவை வீழ்த்த முடியுமா? என்பதை அறிய நாடே ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தேசத்தின் மனநிலையை ஓரளவுக்கு நெருக்கமாகக் கணிக்கும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை விட, ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த தேர்தலுக்குப் பிறகு, இன்னும் தெளிவான பார்வை கிடைக்கும். எனவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன.
இந்தியா டுடே கணிப்பு முடிவுகள்: இந்நிலையில், இந்தியா டுடே நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 33-37 இடங்களைப் பிடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி 2 - 4 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக கூட்டணி 0-2 இடங்களை மட்டுமே பிடிக்கக்கூடும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள கணிப்பு தெரிவிக்கிறது.
அதிமுகவுக்கு பெரிய அடி?: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவும் நிலையில், மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான் அதிமுகவை பாஜக முந்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதேபோல, எதிர்பார்க்கப்படும் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி 46%, பாஜக கூட்டணி 22%, அதிமுக கூட்டணி 21%, மற்றவை 11% வாக்குகளைப் பெறும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதேசமயம், கட்சி வாரியாக வாக்குகளைப் பகுத்துப் பார்த்தால் திமுக 26%, காங்கிரஸ் 10%, அதிமுக 19%, பாஜக 14%, மற்ற கட்சிகள் மொத்தமாக 31% வாக்குகளைப் பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications