டெல்லியில் நடந்த முக்கிய மீட்டிங்.. நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக மூத்த தலைவரும், எம்.பியுமான தம்பிதுரை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக எம்.பி.தம்பிதுரை சந்திப்பு மேற்கொண்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த மார்ச் 28ஆம் தேதி டெல்லி சென்று சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைப்பெற்ற இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரியளவில் பேசு பொருளாக மாறியது. இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

AIADMK MP Thambidurai Meets Nirmala Sitharaman Amid Alliance Speculations

கூட்டணி தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்று தனியார் ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டியில் அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மனு அளித்ததாகக் குறிப்பிட்டார். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும், வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என்றும், அதற்கு வசதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் அல்லது வேறு ஒருவர், பாஜக மாநிலத் தலைவராக விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசி உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான டெல்லி முகமாக அறியப்படும் தம்பிதுரை, நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த பிறகு, டெல்லி சென்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து விட்டுத் திரும்பினார். இந்நிலையில், இன்று தம்பிதுரை திடீரென நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியுள்ளார்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+