மேகதாது அணையை கட்டக் கூடாது... அதிமுக எம்.பி-க்கள் 7 வது நாளாக போராட்டம்
டெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாதுவில் அணை கட்டி குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதிமுக எம்.பி-கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில், கையில் பதாகைகளை ஏந்தியவாறு அதிமுக எம்.பி-க்கள் 7வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, தெலுங்கு தேச கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications