கதிகலங்க வைத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் AXB 613.. என்ன தான் நடந்தது? மத்திய அரசு கொடுத்த விளக்கம்!
டெல்லி: திருச்சியில் இருந்து சார்ஜா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் AXB 613 ஹைட்ராலிக் கோளாறுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய நிலையில், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரிக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலையில் 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு சென்றது. விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்த விமானத்தில் சிறிது நேரத்தல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது.
இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருந்தது. சுமார் 2.30 மணிநேரம் வானில் வட்டமடித்த விமானம் எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரிக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," விவரம்: திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு 141 பயணிகள் உடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் AXB 613-ல் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாறுக்குப் பிறகு, விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
அவசர நிலைமைக்கு ஏற்ப, குழுவினர் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறப்பானதாக உள்ளன. மாலை 18:05 மணிக்கு முழுமையான அவசர நிலை அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அவசர உதவி குழுக்கள் விரைவாக மற்றும் திறமையாக செயல்பட்டனர்.
விமானத்தின் தரை இறக்கம் இரவு சுமார் 8.15 மணிக்கு வெற்றியாக நடைபெற்றது. இதனை மத்திய அரசு சார்பில் வெகுவாகப் பாராட்டுகிறோம். சிவில் ஏவியோன் இயக்கத்தின் (DGCA) மூலம், ஹைட்ராலிக் சிக்கலின் உண்மையான காரணத்தை அறிந்துகொள்ள முழுமையான ஆய்வை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்து கொடுக்க மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் அடுத்த பயணத்திற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கே முதன்மை முன்னுரிமை அளிகப்படுகிறது என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம். வான் பயணத்தில் பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கு உயர்தர வசதியை உறுதி செய்வதற்காக, அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அரசு சார்பில் நெருக்கமான தொடர்பில் உள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications