"கஞ்சா போதை.." நிற்க முடியல.. ஷூ கூட இல்லை.. 300 அடி சரிந்த ஏர் இந்தியா விமான பைலட்டின் நிலை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி சரிந்த விவகாரத்தில் பயணிகள் பலரும் காயமடைந்திருந்தனர். இது தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. இரு பைல்டகளில் ஒருவர் கஞ்சா போதையில் விமானத்தை இயக்கியது உறுதியான நிலையில், அவர் தட்டு தடுமாறிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி, தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-2379 திடீரென 300 அடி சரிந்தது. விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் குறைந்தது 20 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். சில விமான பணிப்பெண்கள் மருத்துவமனையில் அனுமதியாகும் அளவுக்கு படுகாயமடைந்திருந்தனர்.

Air India flight Air India Turbulence

ஏர் இந்தியா

விமானம் கடுமையான டர்புலன்ஸில் சிக்கியதே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பு விமான விபத்து விசாரணை அமைப்பான ஏஏஐபி வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைப்பு விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வருகிறது. குறிப்பாக விமானிகளில் ஒருவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது அதிர்ச்சி ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

நிற்க கூட முடியல

அதன்படி விமானம் சட்டென சரிந்தபோது, விமானி காக்பிட் தரையில் உட்கார்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. விமானம் சில நொடிகளில் 300 அடி சரிந்ததன் தாக்கம் காரணமாக அவர் இதுபோல தனது இருக்கையில் இருந்து தடுமாறிவிழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும், ஷூ சாக்ஸ் கூட இல்லாமல் அந்த பைலட் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதில் உறுதியான தகவல்கள் இல்லை. மேலும், விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, விமானியால் நேராக நிற்க கூட முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் அங்கு சுற்றி இருந்த அதிகாரிகளை தான் அந்த பைலட் உட்கார உதவியுள்ளனர்.

மோதல்

அந்த விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டு போதைப்பொருள் பரிசோதனைகளிலும் அவர் கஞ்சா பயன்படுத்தப்பட்டது உறுதியானது. இதை மறுத்துள்ள அந்த பைலட், தான் கஞ்சா எதையும் சாப்பிடவில்லை என்று கூறுகிறார்.. ஆனால், விசாரணையில் பைலட் கஞ்சா புகைத்ததாக கேபின் குழு உறுப்பினரே புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் முன்பு அதே விமானிக்கும் கேபின் குழுவினருக்கும் இடையே மோதல் இருந்ததையும் இங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படி இந்த விவகாரத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதால் எந்தவொரு தெளிவான தகவல்களும் தெரியவில்லை.

வீடியோ வேண்டாம்

விமானம் திடீரென 300 அடி சரிந்தபோது பயணிகள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர். அப்போது பைலட் விமானி கேபினுக்கு சென்று காயமடைந்தவர்களை பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது தன்னை வீடியோ எடுக்க வேண்டாம் என்று பயணிகளிடம் அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோல இதில் பல மர்மங்கள் உள்ளன. இந்த சம்பவத்தின் முழுமையான காரணத்தை கண்டறிய இரு விமானிகளிடமும், கேபின் குழுவினரிடமும் ஏஏஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் விமானியின் போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள், விமானத்தின் திடீரென சரிந்தது மற்றும் சம்பவத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் ஆகியவை விசாரணையின் முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன. ஏற்கனவே விமானத்தில் கருப்பு பெட்டியும் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+