நடுவானில் சட்டென ஜீரோவுக்கு போன இஞ்சின் ஆயில் பிரஷர்.. ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் திடீரென இஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் இஞ்சினில் ஆயில் பிரஷர் குறைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது இண்டிகோவுக்கு போட்டியாக ஏர் இந்தியா மட்டுமே மெல்ல உருவெடுத்து வருகிறது. இருப்பினும், ஏர் இந்தியா நிறுவனத்தில் சமீப காலங்களாக நடக்கும் சம்பவங்கள் அவர்களுக்குச் சிக்கலையே கொடுக்கிறது. குறிப்பாக இந்தாண்டு நடந்த விபத்து, அவர்களின் இமேஜ்ஜை கடுமையாகப் பாதித்துள்ளது.

இதற்கிடையே மீண்டும் அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது. டெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் உடனடியாக மீண்டும் டெல்லிக்குத் திரும்பியது. இந்தச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
விமானத்தின் வலதுபுற இன்ஜினில் எண்ணெய் பிரஷர் திடீரெனக் கடுமையாகக் குறைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
அதிகாலை 3.20 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த ஏர் இந்தியா போயிங் 777-337 ER ரக ஏஐ887 விமானம் புறப்பட்டுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்திலேயே விமானத்தின் இன்ஜின் நம்பர் 2இன் எண்ணெய் பிரஷர் பயங்கரமாக குறைந்துள்ளது. சில நிமிடங்களில் அதன் பிரஷர் ஜீரோ வரை கடுமையாகச் சரிந்துள்ளது. இதையடுத்து அவசர நடைமுறைகளைப் பின்பற்றி, விமானம் டெல்லிக்குத் திரும்பியது.
அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகள் மற்றும் குழுவினர் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக வெளியேறினர். இஞ்சின் தொடர்பான எச்சரிக்கை கிடைத்தவுடனே பாதுகாப்பு நெறிமுறைகளின்படி செயல்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அந்நிறுவனம் மேலும் கூறுகையில், "இன்று (டிசம்பர் 22) டெல்லி-மும்பை ஏஐ887 விமானத்தில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பச் சிக்கல் கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடைமுறைகளின்படி விமானத்தை மீண்டும் டெல்லிக்குத் திருப்ப முடிவு செய்யப்பட்டது.. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து பயணிகளும் குழுவினரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் இப்போது தேவையான தொழில்நுட்பச் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முழுச் சோதனைக்கு பிறகே விமானம் மீண்டும் இயக்கப்படும்" என்றார்.
விமானத்தில் சிக்கல் இருப்பதைத் தெரிவித்த உடனேயே டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்கியதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் மும்பை சென்று சேர மாற்று விமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
-
"குற்ற உணர்வு.. நைட் தூங்க முடியல.." ஏர் இந்தியா விபத்து! ஓராண்டிற்கு பிறகும் உயிர் பிழைத்தவர் கதறல் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications