விமானத்தில் நெளிந்த மர்ம பொருள்.. கிட்ட போய் கை வைத்த பயணி.. நடுவானில் நடந்த ஷாக் சம்பவம்
டெல்லி: ஏர் இந்தியா கடந்த சில காலமாகச் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இப்போது உள்ளே பயணித்த பயணி ஒருவரை விஷ ஜீவன் சீண்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் இப்போது விமானத்துறை மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
இடையில் கொரோனா காலத்தில் மட்டுமே சில ஆண்டுகள் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்தது. அதைத் தவிர விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

விமானத்துறை: கொரோனா பாதிப்பு இப்போது முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், விமான பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதேபோல மத்திய அரசும் கூட உதய் உள்ளிட்ட திட்டத்தின் கீழ் விமான பயணத்தை ஊக்குவித்தே வருகிறது.. இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது இண்டிகோ நிறுவனம் தான் டாப்பில் இருக்கிறது. அதற்குச் சற்று போட்டி கொடுத்த ஸ்பைஸ் ஜெட் மற்றும் கோ ஏர் காணாமல் போய்விட்டது.
இதனால் இப்போது அனைத்து ரூட்களிலும் இண்டிகோ ஆதிக்கம் தான். அதேநேரம் வரும் காலத்தில் ஏர் இந்தியா இதற்கு கடும் போட்டியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியாவை இப்போது டாடா குழுமம் வாங்கியுள்ள நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு வரும் காலத்தில் ஏர் இந்தியா கடும் போட்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இப்போது இந்தியச் சந்தையில் இருக்கிறது.

சர்ச்சை: இந்திய விமானத்துறை மின்னல் வேகத்தில் வளர்ந்து வந்தாலும் கூட, சமீப காலங்களாக இந்திய விமானங்களில் நடக்கும் சம்பவங்கள் நன்றாக இல்லை. நடுவானில் மது அதிகம் குடிப்பது, சிறுநீர் போவது என அடுத்தடுத்து சர்ச்சை சம்பவங்கள் இந்திய விமானங்களில் அரங்கேறியே வருகிறது.
இதனிடையே கடந்த மாதம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரைத் தேள் கடித்துக் காயப்படுத்தியது மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் அந்த பயணியை டாக்டர் வந்த பரிசோதனை செய்துள்ளார்.
அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்பட்டார் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி எங்கள் விமானம் AI 630இல் பயணித்த பயணியைத் தேள் கடித்த மிகவும் அரிதான மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.

கொட்டிய தேள்: இதையடுத்து உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டது.. மேலும், விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தோம். இறுதியில் அந்த தேள் எங்கே இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அது அகற்றப்பட்டது. விமானம் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சீட்களில் ஏதேனும் பூச்சிகள் தொல்லை உள்ளதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் கூறினார். அதேநேரம் விமானத்தில் இதுபோல பூச்சிகள் அல்லது ஊர்வனங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறை இல்லை.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில், கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, சரக்கு பகுதியில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications