ஏர் இந்தியா விமானத்தில் நடு வானில் தகராறில் ஈடுபட்ட பயணி.. டெல்லியில் இறக்கி போலீசில் ஒப்படைப்பு!
டெல்லி: அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்க இருந்த போது, பயணி ஒருவர் மற்றொரு பயணியுடன் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ 454 விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்க இருந்த போது, ஒரு பயணி எழுந்து மற்றொரு பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்தப் பயணி, விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்தார். பிசினஸ் கிளாஸ் இருக்கை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பயணிக்கு மாற்று இருக்கையை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன் பிறகு நிலைமை அமைதியாகி, விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியதும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications