300 அடி சரிந்த ஏர் இந்தியா விமானம்.. போதை பொருள் யூஸ் செய் பைலட்.. சோதனையில் பகீர் தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் கடுமையான டர்புலன்ஸில் சிக்கி, திடீரென 300 அடி சரிந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அதில் ஒரு பைலட் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன தான் விமானங்களில் உச்சபட்ச பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படும் என்றாலும் கூட அதையும் தாண்டி சில சமயங்களில் விமானங்களில் மோசமான சம்பவங்கள் நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது.

Air India flight Air India Turbulence

300 அடி சரிந்த விமானம்

தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் திடீரென டர்புலன்ஸில் சிக்கியது. இதனால் விமானம் சுமார் 300 அடி சரிந்த நிலையில், உள்ளே இருந்த பணிப்பெண்கள், பயணிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போதை பொருள்

இந்தச் சூழலில் தான் இரண்டு விமானிகளுக்கும் போதை பொருள் சோதனை நடந்துள்ளது. அதில் ஒரு விமான போதை பொருள் பயன்படுத்தியதாக டெஸ்ட் ரிப்போர்ட்டில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா டுடே இது தொடர்பாக செய்தியை வெளியிட்டுள்ளது. இதையடுத்து விசாரணை முடியும் வரை, இரு பைலட்களும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கை நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிசிஏ விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவுகளை பொறுத்து, இந்த விவகாரம் மேலும் விரிவான விசாரணைக்காக ஏஏஐபி எனப்படும் Aircraft Accident Investigation Bureau வசம் ஒப்படைக்கப்பட வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா

இதற்கிடையே விமானிகளின் பரிசோதனை முடிவு குறித்து ஏர் இந்தியா இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த டர்புலன்ஸ் சம்பவத்துக்கு பிறகு விதிமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டதை உறுதி செய்துள்ள ஏர் இந்தியா, அதன் முடிவுகள் தங்களிடம் பகிரப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பதாகவும், விமானக் குழுவினருக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி AI2379 என்ற ஏர் இந்தியா A320 விமானம் தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 விமான பணிப்பெண்கள் இருந்தனர். பயணத்தின்போது விமானம் திடீரென கடுமையான டர்புலன்ஸில் சிக்கியது. இதனால் விமானம் வெறும் சில நொடிகளில் சுமார் 300 அடி வரை சரிந்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் கேபின் குழுவை சேர்ந்தவர்கள்.

இந்த டர்புலன்ஸ் சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்தது. சில விமான குழுவினருக்கு முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதி மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்திருந்தார்.

வல்லுநர்கள் சொல்வது என்ன

அதேநேரம் டர்புலன்ஸ் என்பது இயற்கை தொடர்பானது என்றும் அதில் விமானம் சிக்கியதற்கு பைலட் காரணம் என சொல்ல முடியாது என வல்லுநர்கள் கூறுகிறார்கள். அந்த பைலட் போதை பொருள் பயன்படுத்தியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், விமானம் டர்புலன்ஸில் சிக்க அது காரணம் என சொல்வது ஏற்கும்படி இல்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+