பூகம்பம் வந்திருச்சுனு நினைச்சேன்.. விமானம் விழுந்த நேரம்.. நேரில் பார்த்தவர் சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் பலரையும் கவலையடைய செய்துள்ளது. இந்த சூழலில் விமான விபத்திற்கு பின் நேரில் சென்று பார்த்த நபர் சொன்ன வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்தின் சத்தம் பூகம்பம் வந்துவிட்டதோ என்று தோன்ற வைத்துவிட்டதாக கூறிய அவர், எங்கும் விமான பாகங்களும், சடலங்களும் இருந்ததாக கூறி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமான ட்ரீம்லைனர் விமானம் விபத்தில் சிக்கி இருக்கிறது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சிக்னலை இழந்த நிலையில், அடுத்த சில நொடிகளில் மேகானி நகரில் அமைந்துள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து நொறுங்கி இருக்கிறது.

Air India Plane Crash Sound Felt Like Earthquake Says Eyewitness Debris and Bodies Scattered Everywhere

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 7 குழந்தைகள் உட்பட 230 பயணிகளும், 2 பைலட் மற்றும் 10 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். இதில் 133 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மிகவும் கொடூரமான விபத்து என்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக மே டே அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. விமான கட்டுப்பாட்டை இழந்து அபாயகரமான நேரங்களில் கொடுக்கப்படுவதே மே டே அலர்ட். இந்த அலர்ட் கொடுக்கப்பட்ட சில நொடிகளிலேயே வானில் கரும்புகை எழுந்துள்ளது. இதன்பின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் விமான விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறிய வார்த்தைகள் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் பேசுகையில், விமான மோதி வெடித்து சிதறிய சத்தத்தால் பூகம்பம் வந்துவிட்டதோ என்று நினைத்துவிட்டேன். வீட்டில் இருந்து பின்னர் வெளியில் வந்து பார்த்த போது, கரும்புகை சூழ்ந்திருந்தன.

அதன்பின் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போது, எங்கு பார்த்தாலும் விமான பாகங்களும், மனித உடல்களும் சிதறி கிடந்தன என்று கூறி இருக்கிறார். இந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் சென்று விழுந்து நொறுங்கியதால், விடுதியில் உணவருந்தி கொண்டிருந்த மாணவர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+