உக்ரைனில் சிக்கி தவிக்கும் 1,000 தமிழர்கள் உட்பட இந்தியர்களை மீட்க விரைகிறது ஏர் இந்தியா விமானம்
டெல்லி: போர் சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் தவிக்கும் 1,000 தமிழர்கள் உட்பட இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் விரைவில் இயக்கப்பட உள்ளது.
Recommended Video

உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நிமிடத்திலும் போர் தொடுத்து ஆக்கிரமிக்கலாம் என்கிற சூழல் நிலவுகிறது.
ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் களமிறங்குகின்றன. இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளிநாடுகள் தங்கள் நாட்டவரை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றன.
இதேபோல உக்ரைனில் உள்ள இந்தியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானங்களை இயக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே உக்ரைனில் 1,000க்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக உக்ரைனில் வசிக்கு தமிழர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் இயக்கப்பட்டதைப் போல வந்தே பாரத் திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப வரும் 22, 23 மற்றும் 26-ந் தேதிகளில் விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த விமானங்களில் பயணம் செய்ய இயலாதவர்கள் பதற்றம் அடைய தேவையில்லை; நாடு திரும்ப உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications