காற்று மாசு! தத்தளிக்கும் தலைநகர் டெல்லி! அனல்மின் நிலையத்தையும் மூடியாச்சு!
டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் புகை நச்சுமண்டலத்தால் கடந்த 10 நாட்களாக அவதியுற்று வருகிறது. இதனால் சிறிது நாட்களுக்கு டெல்லி மாநிலத்தில் முழுமுடக்கம் அறிவிக்கலாம் என ஆலோசனை கூறியிருத்தது. இதனை பரிசீலித்த டெல்லி மாநில அரசு முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல் அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தி உள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காற்று மாசு குறைந்தபாடில்லை. சாலைகள் முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளால் நிம்மதியாக செல்ல முடியவில்லை.

காற்று மாசுவிற்கு என்ன காரணம்?
டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சூழ்ந்துள்ள புகை மண்டலத்திற்கு முதலில் அண்டை மாநிலங்களில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் எனக் காரணம் கூறப்பட்டது. ஆனால் நீண்ட ஆய்வுக்குப்பின்னர் காற்று மாசுவிற்கு அது பிரதான காரணம் இல்லை என்றும், வாகனங்களில் வெளியேறும் புகையும் சமீபத்தில் தீபாவளி பண்டிகையால் பொதுமக்கள் வெடித்த பட்டாசும்தான் காரணம் என தெரியவந்துள்ளது.

காற்று தர மேலாண்மை ஆணையம் கட்டுப்பாடு
இந் நிலையில், டெல்லி காற்று தர மேலாண்மை ஆணையம் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அறிவித்துள்ளது. நவம்பர் 21 வரை அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள், லாரிகள் டெல்லி மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வருட வாகனங்கள் பயன்படுத்தத் தடை
மேலும் 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விமானம், ரயில், பேருந்து மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தவிர்த்து மற்ற கட்டுமானம், இடிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனல்மின் நிலையங்கள் மூடல்
மேலும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300 கிமீ தொலைவுக்குள்ள அனல்மின்நிலையங்களில் ஐந்தை தவிர மற்றவைகளை நவம்பர் 30 வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெய்ஜார், மகாத்மா காந்தி, உள்ளிட்ட 5 அனல்மின்நிலையங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக சி.என்.ஜி. மூலம் அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபராதம்
மேலும் சாலைகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தவது தொடர்பான கூட்டத்தில் உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புதிய விதிகள் வகுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் 22ம் தேதி அறிக்கை அளிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications