வாட்டி வதைக்கும் குளிர்.. வட மாநிலங்களில் தவிக்கும் மக்கள்! விமான, ரயில் சேவைகளும் பாதிப்பு
டெல்லி: வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில், ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லிக்கு இன்றும் நாளையும், கடும் பனி மூட்டத்திற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக டிசம்பர் தொடங்கி ஜனவரி வரை நாடு முழுவதும் பனி மூட்டம் இருக்கும். ஆனால் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு பனி பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் 7 டிகிரி அளவுக்கு குளிர் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகனங்கள் சிறு சிறு விபத்தில் சிக்கியுள்ளன. சாலையோரம் இருப்பவர்களை, மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. அதேபோல காற்றின் தரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் டெல்லிக்கு வரும் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டிருக்கின்றன. சுமார் 14 ரயில்களும் கடும் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வானிலை சூழல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, டெல்லியில் பனி மூட்டத்திற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
இந்த காலங்களில் வழக்கமாக பனி மூட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த முறை இயல்பைவிட அதிமாக பனிமூட்டம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக கூட இது போன்று கடும் பனிமூட்டம் நிலவலாம் என்றும் சொல்லப்படுகிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications