Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர் விமானம் டூ ஏவுகணை வரை.. பாகிஸ்தானை தாக்க தயாரான இந்தியா? கையில் 4 பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 27 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோய் உள்ளது. இதற்கு பதிலடி தர இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும்? அந்த தாக்குதல்களில் இலக்கு என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்பது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் பினாமி அமைப்பாகும்.

terror attack jammu kashmir Union Government

இந்த அமைப்பு நம் நாட்டில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியாக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி உயிர்களை கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவின் கையில் மொத்தம் 4 பிளான்கள் உள்ளன. இதில் ஒன்று அல்லது 2 ஆப்ஷனை இந்தியா கையில் எடுத்து பாகிஸ்தானை கதறவிடலாம்.

முதல் ஆப்ஷன்

அதன்படி இந்தியாவின் கையில் இருக்கும் முதல் ஆப்ஷன் ஏர் ஸ்டிரைக். அதாவது வான்வெளி தாக்குதல். பாகிஸ்தான் மீது ஏற்கனவே இந்தியா இந்த வான்வெளி தாக்குதலை நடத்தி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தான் உள்ளே புகுந்து நம் போர் விமானங்கள் தாக்கின. அதுபோல் இந்த முறையும் நம் விமானப்படை பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கப்படலாம். மிரஜ் 2000 (Miraj 2000) அல்லது சு-30 எம்கேஐ (Su-30 MKI)ரக போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானை தாக்கலாம். இந்த விமானங்களால் அதிக எடையை சுமக்க முடியும் என்பதால் இந்த விமானங்களை தாக்குதலுக்கு இந்தியா பயன்படுத்தலாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி, நிகியல் மற்றும் ஜூராவில் உள்ள பயங்கரவாத பயிற்சி மையம், முகாம்களை குறிவைத்து இந்த விமானங்கள் அழிக்கலாம். இங்குள்ள முகாம்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானவை இங்கு பாகிஸ்தானின் எஸ்எஸ்ஜி எனும் சிறப்பு சேவை குழுவை சேர்ந்தவர்களின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆப்கானிஸ்தான் வழியாக கடத்தி வரப்படும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏர்ஸ்டிரைக் நடத்தும் பட்சத்தில் இந்த முகாம்களை நம் நாட்டு விமானப்படையால் சில நிமிடங்களில் தரைமட்டமாக்க முடியும். இது முதல் ஆப்ஷனாக இருக்கிறது.

2வது ஆப்ஷன்

இதில் 2வது ஆப்ஷன் என்பது சிறப்பு படைகளின் தாக்குதல் நடவடிக்கையாகும். இதையும் இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக கையாண்டு நம் நாடு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் தேி காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உரி அருகே உள்ள ராணுவ பிரிகேட் தலைமையகத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் பலியாகினர். 19 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதற்குபதிலடியாக நம் நாடு தெற்கு காஷ்மீரில் சிறப்பு படையினர் களமிறக்கப்பட்டனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சிறப்பு படையை சேர்ந்த வீரர்கள் நிறுத்தப்பட்டன.

நம் உளவுத்துறை ஏற்கனவே அபு ஹம்சா, சைஃபுல்லா உள்ளிட்ட பயங்கரவாதிகளின் விபரங்களை சேகரித்து வைத்துள்ளது. இவர்கள் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சிறிது தூரத்தில் உள்ள கஹுதா, லீபாவையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை எல்லை சிறப்பு படை வீரர்கள் போட்டு தள்ளலாம். இது நம் நாட்டின் கையில் இருக்கும் 2வது ஆப்ஷன்.

3வது ஆப்ஷன்

3வது ஆப்ஷன் என்னவென்றால் ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல். பாகிஸ்தானுக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால் கூட நம் நாட்டின் பைலட்டுகளுக்கு ஆபத்து இருக்கும். ஆனால் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் என்பது நம் நாட்டின் வீரர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் எல்லையில் இருந்தே ஏவுகணை, ட்ரோன்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். குறிப்பாக நம் நாட்டிடம் பிரமோஸ் குரூஸ் ஏவுகணை உள்பட பல ஏவுகணைகள் உள்ளன. இந்த ஏவுகணைகளை இடைமறிக்கும் தொழில்நுட்பம் பாகிஸ்தானிடம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த முறை இந்தியா ஏவுகணையை கையில் எடுக்கவும் வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமின்றி அதையும் தாண்டி உள்ளே உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள், வெடிப்பொருட்களின் கிடங்கு, தளவாடக கிடங்குகள் உள்ளிட்டவற்றை கூட அழிக்க முடியும். இது 3வது ஆப்ஷன்.

4வது ஆப்ஷன்

4வது ஆப்ஷன் என்னவென்றால் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது பல நாடுகளுக்கும் தெரியும். இதனை இன்னும் ஆதாரங்களுடன் இந்தியா உலக நாடுகளிடம் நிரூபித்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கலாம். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் - இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் விபரங்களையும், பாகிஸ்தான் அதனை மீறியது தொடர்பானவற்றையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதோடு, ஹவாலா பணப்பரிமாற்றம், ஆயுதம் கடத்தல், எல்லை தாண்டி பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force or FATF) மூலம் கிரே பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வைக்கலாம். இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை விரைவில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி என்பது தான் கொடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உறுதி செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+