ஏர்டெல், ஜியோ.. 5 ஜி வந்தாச்சு.. உங்க ஸ்மார்ட் போன் சப்போர்ட் பண்ணுமா.. கண்டுபிடிக்கிறது எப்படி?
டெல்லி: சென்னை, மும்பை, டெல்லி நகரங்களில் 5 ஜி இணைய சேவை கிடைக்க தொடங்கி வரும் நிலையில், எந்த ஸ்மார்ட் போன்கள் 5 ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 4 ஜி இணைய சேவையை விட 10 மடங்கு அதிவேகம் கொண்ட 5 ஜி நெட்வொர்க்கை பிரதமர் மோடி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக நாட்டின் முக்கிய சில நகரங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் 5 ஜி சேவை 8 நகரங்களிலும் ஜியோ 5 ஜி சேவை 4 நகரங்களில் கிடைக்கிறது.

5 ஜி இணைய சேவை எப்படி இருக்கும்
இணைய பயன்பாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டது என்றும் சொல்லும் அளவுக்கு 4 ஜி சேவை இருந்தது. ஆனால், இதை விட பன்மடங்கு வேகம் கொண்ட 5 ஜி சேவை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் பெருகிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 5 ஜி சேவை அறிமுகம் ஆகும் முன்பே 5 ஜி சப்போர்ட் வசதி கொண்ட செல்போன்களை பல்வேறு நிறுவனங்களும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன.

ஜியோ, ஏர்டெல் 5 ஜி சேவை
இருந்தாலும் பயனர்கள் மத்தியில் தங்கள் செல்போன் 5 ஜி சேவையை சப்போர்ட் செய்யுமா? என மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால், அனைத்து ஸ்மார்ட் போன்களும் 5 ஜி நெட்வொர்க் சப்போர்ட் செய்யாது என்பதை பயனர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் 5 ஜி சேவையை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இருந்தால் மட்டுமே ஜியோ மற்றும் ஏர்டெல் 5 ஜி சேவையை அனுபவிக்க முடியும்.

5 ஜி சப்போர்ட் வசதி கொண்டதா?
இன்னும் சுருக்கமாக சொன்னால், 2ஜி, 3ஜி மற்றும் 4 ஜி சப்போர்ட் செய்யும் செல்போன்கள் வைத்திருப்பவர்களால் 5 ஜி சேவையை தற்போது பெற முடியாது. ஆனால், உங்கள் ஸ்மார்ட் போன் 5 ஜி சப்போர்ட் வசதி கொண்டதா? இல்லையா என்று தெரியாதவர்களுக்கு அதை கண்டுபிடிப்பதற்கான டிப்ஸ் கீழே உள்ளது. அதை பார்க்கலாம்.

5 ஜி சப்போர்ட் செய்யுமா
உங்கள் போன் 5 ஜி சப்போர்ட் செய்யுமா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
Step 1: உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் செயலிக்கு செல்லுங்கள்.
Step 2; அதில் உள்ள 'Wi-Fi & Network' ஆப்ஷனை கிளிக் பண்ண வேண்டும்.
Step 3: அதன்பிறகு 'SIM & Network' ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: உங்களின் விருப்பமான நெட்வொர்க் 'Preferred network type' ஆப்ஷனில் உங்கள் சப்போர்ட் செய்யும் தொழில்நுட்ப வசதி காண்பிக்கும்.
Step 5: உங்கள் போன் 5 ஜி சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது என்றால் 2G/3G/4G/5G என அதில் வரிசையாக காண்பிக்கும்.

இணைய வேகம் எப்படி இருக்கிறது
ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5 ஜி சேவையை தொடங்கியுள்ள நகரங்களில் நீங்கள் வசித்து வந்தால், 2G/3G/4G/5G ஆப்ஷனில் கிளிக் செய்து 5 ஜி இணைய வேகம் எப்படி இருக்கு என்பதை நீங்கள் பரிசோதிக்கலாம். எனவே, நீங்கள் 5 ஜி சேவையை பெற வேண்டும் என்றால் முதலில் 5 ஜி சப்போர்ட் செய்யும் போனை வாங்க வேண்டும். சம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தற்போது 5 ஜி சப்போர்ட் செய்யும் செல்போன்களை சந்தைகளில் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அதிலும் ரியல்மீ, லாவா உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.10 ஆயிரத்திற்கும் கீழே 5 ஜி சப்போர்ட் செய்யும் போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications